Home /News /sports /

டி20 உலகக்கோப்பை: இந்திய வீரர்களுக்கு புதிய ஜெர்சி

டி20 உலகக்கோப்பை: இந்திய வீரர்களுக்கு புதிய ஜெர்சி

இந்திய அணி வீரர்கள்

இந்திய அணி வீரர்கள்

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையில் இந்திய வீரர்கள் அணியும் புதிய சீருடையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிமுகம் செய்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • inter, Indiaaustraliaaustralia
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையில் இந்திய வீரர்கள் அணியும் புதிய சீருடையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிமுகம் செய்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16ம் தேத் உலகக்கோப்பை தொடங்குகிறது. மும்பையில் உற்சாகமான ரசிகர்கள் முன்னிலையில் இந்தப் புதிய ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டது.
ரோஹித் சர்மா, ஹர்மன்பிரீத் கவுர், ஹர்திக் பாண்டியா, ஷபாலி வர்மா, சூரியகுமார் யாதவ், ரேணுகா சிங் ஆகியோர் புதிய ஜெர்சியில் காணப்படும் புகைப்படத்தை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தன் சமூக ஊடகப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது:



7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி தொடங்குகிறது. மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.
முதல் சுற்றில் விளையாடும் அணிகளில் இருந்து நான்கு  அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். இந்தச் சுற்றில் ஆடிதான் இலங்கை அணி பிரதான சுற்றுக்குத் தகுதி பெற வேண்டும். வெஸ்ட் இண்டீஸின் நிலைமையும் இதுவே.
Published by:Lakshmanan G
First published:

Tags: Australia, Cricket, International, T20 World Cup

அடுத்த செய்தி