ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

தோனியால் முடிந்தது ஏன் மற்ற கேப்டன்களால் முடியவில்லை ? வியாபார நோக்கத்துடன் செயல்படுகிறதா பிசிசிஐ?

தோனியால் முடிந்தது ஏன் மற்ற கேப்டன்களால் முடியவில்லை ? வியாபார நோக்கத்துடன் செயல்படுகிறதா பிசிசிஐ?

மாதிரி படம்

மாதிரி படம்

இந்திய அணியில் தோனி செய்த மாற்றங்களால் தான் மூன்று வகையான போட்டிகளிலும் இந்திய அணியால் சாதிக்க முடிந்தது.

 • News18 Tamil
 • 5 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தோனியால் முடிந்தது ஏன் மற்ற கேப்டன்களால் முடியவில்லை ? வியாபார நோக்கத்துடன் செயல்படுகிறதா பிசிசிஐ?டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இங்கிலாந்து அணியில் படுதோல்வி அடைந்து வெளியேறிய நிலையில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தோனி பெயரை உச்சரிக்க என்ன காரணம்

  டி20 உலககோப்பையில் இரண்டாவது அரையிறுதி போட்டி இந்தியா -இங்கிலாந்து அணிகள் மோதின. அடிலெய்ட்டில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஹர்திக் பாண்டியாவின் அதிரடியால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்துள்ளது. ஹர்டிக் பாண்டியா 33 பந்துகளில் 63 ரன்கள் விளாசினார்.

  இதனையடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் மற்றும் அலக்ஸ் ஹேல்ஸ் இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 16 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. பட்லர் 80 மற்றும் அலக்ஸ் 86 ரன்கள் குவித்தனர்.

  இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு கேப்டன் ரோகித் சர்மாவை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். காரணம் இந்திய அணி ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாமல் படுதோல்வி அடைந்தது. இதற்கும் தோனி என்ன செய்வார் ஏன் அவரை டிவிட்டரில் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

  ஐசிசி தொடரில் தோனி தலைமையிலான இந்திய அணி கடந்த 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றது. அதன் பின்னர், ஐசிசி தொடரில் இந்திய அணி இதுவரை எந்த வித கோப்பையையும் வெல்லவில்லை. கடந்த 2007 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற தோனிக்கு பல்வேறு சவால்கள் இருந்தன. கம்பீர், சேவாக், ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இருந்தபோதும் தோனிக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது. முதன் முறையாக டி20 உலகக்கோப்பை தொடங்கப்பட்டதால் இந்திய அணி ரசிகர்களுக்கு மிக ஆர்வமாக இருந்தனர். அவர்களின் எண்ணத்தை ஈடு செய்யும் வகையில் கம்பீர், சேவாக், உத்தப்பா, யுவராஜ், ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக்,ஹர்பஜன் சிங், ஜோகிந்தர் சர்மா, ஆர்.பி. சிங்,பதான் சகோதர்கள் வைத்து டி20 உலகக்கோப்பை வென்ற சரித்திர வரலாறு படைத்தார் தோனி.

  இதையும் படிங்க: எங்கு கோட்டைவிட்டோம்... தோல்வி குறித்து கேப்டன் ரோகித் சர்மா விளக்கம்

  இதனையடுத்து ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 உள்ளிட்ட அனைத்து வகையான போட்டிக்கும் கேப்டன் பதவி தோனிக்கு வழங்கப்பட்டது. அவர் கேப்டன் பதவி ஏற்றவுடனே இந்திய அணியில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார். மூன்று வகையான போட்டிக்கும் மூன்று வகையான அணியை வைத்துக்கொண்டு அதில் கேப்டனாகவும் சிறப்பாக வழிநடத்தி பல்வேறு சாதனைகளை படைத்தார். குறிப்பாக டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை இந்திய அணி பிடிக்க வேண்டும் அனைவரது மிகப்பெரிய கனவாக இருந்து. அதனையும் தோனி நிறைவேற்றி கொடுத்தார்.

  சிறப்பாக வழிநடத்தி வந்த தோனி அணியிலும் பல்வேறு மாற்றங்களை செய்ய ஆரம்பித்தார். குறிப்பாக சீனியர் வீரர்களை ஓரம் கட்ட ஆரம்பித்து இளம் வீரர்களை வளர்த்துவிட்டார். குறிப்பாக விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின் உள்ளிட்ட வீரர்கள் இந்த அளவுக்கு வளர அவர்களுக்கு தோனி வழங்கிய வாய்ப்பும் ஒரு காரணம். பொதுவாக தோனி ஐசிசி உலகக்கோப்பை உள்ளிட்ட தொடர்களுக்கு அனைவருக்கும் ஒரு மாற்று வீரரை அணியில் எப்போழுதும் வைத்திருப்பார். வேகப்பந்து வீச்சாளருக்கு காயம் ஏற்பட்டால் அவரை போல ஏற்கனவே தோனி அணியில் உருவாக்கி வைத்திருப்பார். இதனால் இந்திய அணிக்கு போட்டி பாதிக்காதபடி இருக்கும். மாற்று வீரருக்கு வாய்ப்பு அதிகமாக வழங்கி அவரை மெழுகேற்றி வைத்திருப்பார்.

  ஆனால் இப்போது இருக்கும் இந்திய அணியும் அதனை செய்யவில்லை பிசிசிஐ-யும் அதனை செய்யவில்லை. அதற்கு உதாரணமாக இந்த டி20 உலகக்கோப்பை கூட எடுத்துக்கொள்ளாம். வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக யாரை மாற்று வீரராக அணிக்கு அனுப்புவது உள்ளிட்ட குழப்பங்களால் இந்திய அணிக்கு மிகப்பெரிய தலைவலியாக இருந்தது. இதனால் டி20 போட்டிகளில் குறைந்த அனுபவம் இருக்கும் ஷமிக்கு வேறு மாற்று இன்றி அணிக்கு தேர்தேடுக்கப்பட்டார்.

  இதையும் படிங்க: இங்கிலாந்துக்கு எதிராக படுதோல்வி.. இந்திய அணியில் வரவிருக்கும் பல்வேறு மாற்றங்கள்

  இந்திய அணி ஒரே சமயத்தில் இரண்டு அணிகளை அறிவித்து இரண்டு சுற்றுப்பயணங்கள் செய்து அணியை நாசம் செய்துள்ளது பிசிசிஐ. குறிப்பாக விராட் கோலி, ரோகித் சர்மா விளையாடுவது ஒரு இந்திய அணியாகவும், ஷிகர் தவான், ஸ்ரேஸ் ஐயர் உள்ளிட்ட வீரர்கள் விளையாடுவது ஒரு அணியாக பிரித்து பிரித்து மாற்று வீரர்களை கண்டுபிடிக்காதமாறு பல்வேறு குழப்பங்களை நிகழ்த்தி வருகிறது பிசிசிஐ. தோனி கேப்டனாக இருந்தபோதும் அணியில் விராட் கோலியை பட்டை தீட்டி வைத்தார். 2015 உலகக்கோப்பை தொடரில் தோல்வியடைந்த போது, கேப்டன் பதவியை ராஜினாமா செய்து பிறகு விராட் கோலிக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது. அதனையும் விராட் கோலி சிறப்பாக செய்து முடித்தார்.

  பின்னர் விராட் கோலி கேப்டனாக இருக்கும் வரை அவரால் ஒரு வெங்கல கிண்ணம் கூட பெறமுடியவில்லை என விமர்சங்கள் எழுந்தது. இதனால் கோலியிடம் இருந்து டி20 கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. பின்னர் மூன்று வகையான போட்டிகளில் விராட் கோலி கேப்டானாக இருப்பதால் அவருக்கு சுமை அதிகரித்துள்ளதாக இதனால் அவரது சுமையை ரோகித் சர்மாவுக்கு டி20 கேப்டன் பதவி வழங்கப்பட்டதாக பிசிசிஐ விளக்கம் அளித்தது. பின்னர் அனைத்து வகையான கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகியதை அடுத்து பணி சுமை என காரணம் காட்டிய பிசிசிஐ கேப்டன் பதவியை ரோகித் சர்மாவுக்கு வழங்கி அழகு பார்த்தது.

  குறிப்பாக ஐபிஎல் தொடர் வந்ததால் இந்திய அணி ஐசிசி தொடரில் கோப்பையை வெல்ல முடியவில்லை என்ற ஒரு கருத்தும் தற்போது பரவலாக வெளி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே ஐபிஎல் தொடரில் விளையாடுகிறார்கள், ஆஸ்திரேலியா,இங்கிலாந்து அணிகள் நடத்தும் போட்டிகளில் ஏன் இந்திய வீரர்கள் பங்கேற்றக மாட்டுகிறர்கள் என்ற கேள்வி வெகு நாட்களாகவே பலருக்கும் இருந்து வருகிறது. வெளிநாட்டு வீரர்கள் இந்திய வீரர்களுடன் இணைந்து விளையாடினால் தான் வியாபாரம் , வெளிநாட்டு வீரர்களுடன் இந்திய வீரர்கள் இணைந்து விளையாடினால் அது பிசிசிஐக்கு வியாபாரம் இல்லை என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

  இந்திய வீரர்கள் வெளிநாட்டில் நடக்கும் தொடர்களில் பங்கேற்றால் அந்த மைதானங்கள் நன்கு பயிற்சி பெறுவார்கள். இதனால் அடுத்த முறை அந்த நாட்டில் நடைபெறும் தொடர்கள் நன்றாக விளையாடி ஏதுவாக இருக்கும் ஆனால் அது நடக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு தான், இது குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூட நேற்று பேசினார். இப்படி வியாபார நோக்கில் இந்திய அணியை வழிநடத்தி அதில் பிசிசிஐ அதிக லாபம் பார்ப்பதால் இந்திய அணி ஒரு நிலையான அணியாக இருக்க முடியாமல் ஐசிசி தொடர்களை வெல்ல மிக கஷ்டப்படுவதாக கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  இதையும் படிங்க: டி20 கிரிக்கெட் விராட் கோலி புதிய உலக சாதனை படைத்து அசத்தல்

  ஐபிஎல் தொடர் ஆரம்பித்ததில் இருந்து இந்திய அணியில் கேப்டனாக இருக்கும் நபர்கள் மீது கடுமையாக விமர்சனங்கள் இருப்பது உண்டு. ஐபிஎல் அணியில் விளையாடும் வீரர்களை இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். இதனால் மற்ற வீரர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பது கடினமாக உள்ளது. சென்னை அணிக்கு கேப்டனாக இருந்த தோனி அந்த அணியில் விளையாடிய ரெய்னா, ஜடேஜா உள்ளிட்ட வீரர்களை இந்திய அணிக்கு இழுத்து அவர்களுகு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கி வருவதாக பேச்சுக்களும் அப்போழுது எழுந்தது. அப்போழுது மும்பை இந்தியன்ஸ் அணியில் நன்றாக விளையாடிய அம்பத்தி ராயுடு உள்ளிட்ட வீரர்களுக்கு தோனி வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என விமர்சனங்கள் எழுந்தன.

  அதன் பின்னர் விராட் கோலி இந்திய அணிக்கு கேப்டனாக் இருந்த போது கே.எல்.ராகுல், சாஹால்,உமேஷ் யாதவ் உள்ளிட்ட வீரர்கள் அதிகளவில் இந்திய அணியில் விளையாடினர், அப்போழுதும் மும்பை இந்தியன்ஸ் அணியில் நன்றாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் அணியில் இடம் கிடைக்வில்லை உள்ளிட்ட குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.

  இப்போழுது இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா மீதும் அதே விமர்சனம் தான், சூர்யாகுமார் யாதவ், பும்ரா, பாண்டிய, இஷான் கிஷான் உள்ளிட்டவர்களுக்கு இந்திய அணியில் விளையாடி வருவது. அனைத்து இந்திய அணி கேப்டன்கள் மீதும் எழும் பொதுவான விமர்சங்களே. இந்திய அணியில் தோனி வழிநடத்தியபோது எப்படி, மூன்று வகையான ஐசிசி கோப்பைகளை வெல்ல முடிந்தது ஆனால் இப்போழுது இருக்கும் அணி இறுதி போட்டிக்கு நுழைவதே மிக பெரிய விஷயமாக விளங்கி வருகிறது. தற்போது டி20 உலகக்கோப்பை தொடரை ஒரு பாடமாகவே எடுத்துக்கொண்டு இந்திய அணி வலுவாக இருந்தாலும் ஒரு வீரருக்கு மாற்று வீரரை தயார் செய்து வைக்கும் என்ற நம்பிக்கை இனி வரும் காலங்களில் ஏற்படுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: BCCI, ICC, Indian cricket team, MS Dhoni, Rohit sharma, T20 World Cup, Virat Kohli