ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் இந்திய அணி… 20 வீரர்கள் அடங்கிய பட்டியல் ரெடி…

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் இந்திய அணி… 20 வீரர்கள் அடங்கிய பட்டியல் ரெடி…

பிசிசிஐ

பிசிசிஐ

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை முன்னிறுத்தி அடுத்த சில மாதங்களுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் செயல்பாடுகள் அமைக்கப்படவுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணி ஆயத்தமாகியுள்ளது. இதுதொடர்பாக 20 பேர் கொண்ட வீரர்கள் பட்டியல் முதற்கட்டமாக தயார் செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்த வீரர்கள் பங்கேற்கும் அடுத்து வரக்கூடிய போட்டிகளில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக்கோப்பை டி20 தொடரில் இந்திய அணி அரையிறுதியில் வெளியேறியது. இந்த போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை எதிர்கொண்டது.

வங்கதேச சுற்றுப் பயணத்தின்போது இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது. இந்த பின்னடைவுகளை சரி செய்யும் வகையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்று ஆய்வுக் கூட்டத்தை நடத்தியது. இதில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா, தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் விவிஎஸ் லக்ஸ்மன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுமார் 4 மணி நேரமாக நடைபெற்ற இந்த கூட்டம் மும்பையில் உள்ள ஓட்டல் ஒன்றில் நடத்தப்பட்டது. பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்த கூட்டத்தில் பங்கேற்றார்.

இதில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் 20 வீரர்களைக் கொண்ட பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை முன்னிறுத்தி அடுத்த சில மாதங்களுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் செயல்பாடுகள் அமைக்கப்படவுள்ளது. காயமடைந்த வீரர்கள், மாற்று வீரர்கள் உள்ளிட்டவை தொடர்பாகவும் கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டது.

இந்திய அணி வீரர்களின் உடற் தகுதி யோ-யோ மற்றும் டெக்சா சோதனைகள் மூலம் தீர்மானிக்கப்படுகின்றன. இந்த சோதனைகள் தொடரும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்காக 20 பேர்கொண்ட வீரர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டிருந்தாலும் அவர்கள் யார் என்கிற விபரம் சஸ்பென்ஸில் வைக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக இந்திய அணி இலங்கையுடனான கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்யவுள்ள இலங்கை அணி 3 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி ஜனவரி 3ஆம் தேதி மும்பையிலும், இரண்டாவது 20 ஓவர் போட்டி ஜனவரி 5 ஆம் தேதி புனேவிலும், கடைசி டி20 ஜனவரி 7ஆம் தேதி ராஜ்கோட் சவுராஷ்டிரா மைதானத்திலும் நடைபெறுகிறது. இதையடுத்து 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது.

இதன் முதல் போட்டி ஜனவரி 10ஆம் தேதி கவுகாத்தி பரஸ்பரா மைதானத்திலும், 2ஆவது போட்டி ஜனவரி 12ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திலும், 3ஆவது போட்டி ஜனவரி 15 ஆம் தேதி திருவனந்தபுரம் மைதானத்திலும் நடைபெறுகிறது.

இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடும் இந்திய அணி – 

ஹர்திக் பாண்டியா (கேப்டன்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்சல் படேல், உம்ரான் மாலிக் , சிவம் மாவி மற்றும் முகேஷ் குமார்.

‘முதல் டெஸ்டில் பாகிஸ்தானை விட நியூசிலாந்து சிறப்பாக விளையாடியது’ – பாக். முன்னாள் வீரர் கருத்து…

இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணி –   

பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை : தனி விமானம் மூலம் டெல்லி அழைத்து செல்லப்படுகிறார் ரிஷப் பந்த்!

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (துணை கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (வி.சி), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், முகமது. ஷமி, முகமது. சிராஜ், உம்ரான் மாலிக் மற்றும் அர்ஷ்தீப் சிங்.

First published:

Tags: Cricket