ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் சென்றது இந்திய அணி!

Indian Cricket Team Departure To Australia | இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி-20 போட்டி வரும் 21-ம் தேதி பிரிஸ்பேன் நகரில் நடைபெற உள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் சென்றது இந்திய அணி!
விமானநிலையத்தில் ரசிகையுடன் கோலி செல்ஃபி | Twitter/BCCI
  • News18
  • Last Updated: November 16, 2018, 4:45 PM IST
  • Share this:
ஆஸ்திரேலியா உடனான மூன்று டி-20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி மும்பையில் இருந்து புறப்பட்டுச் சென்றது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு, மூன்று டி-20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

இதில், முதலில் நடைபெறும் டி-20 தொடரின் முதல் போட்டி வரும் 21-ம் தேதி பிரிஸ்பேன் நகரில் நடைபெற உள்ளது. 23-ம் தேதி நடைபெறும் 2-வது போட்டி மெல்போர்ன் நகரிலும், 25-ம் தேதி நடைபெறும் 3-வது போட்டி சிட்னி நகரிலும் நடைபெற இருக்கிறது.


விமானநிலையத்தில் இந்திய வீரர்கள் | Twitter/BCCI


அதன்பின், டிசம்பர் 6-ம் தேதி முதல் ஜனவரி 7-ம் தேதி வரை டெஸ்ட் தொடரும், ஜனவரி 12-ம் தேதி முதல் ஜனவரி 18-ம் தேதி வரை ஒருநாள் தொடரும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில், பங்கேற்பதற்காக, இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மும்பையில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.

அதிகாலையில் புறப்பட்ட விமானத்தில் இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு கிளம்பிச் சென்றனர். அவர்கள் விமானநிலையத்தில் காத்திருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பிசிசிஐ, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.


டி-20 தொடர் அணி விபரம்: விராட்கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ரி‌ஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், மணிஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் அய்யர், வாஷிங்டன் சுந்தர், க்ருணால் பாண்டியா, குல்தீப் யாதவ், சாஹல், புவனேஸ்வர் குமார், பும்ரா, உமேஷ் யாதவ், கலீல் அகமது.

டெஸ்ட் தொடர் அணி விபரம்: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ரகானே, புஜாரா, முரளி விஜய், கே.எல்.ராகுல், பிரித்வி ஷா, விஹாரி, ரி‌ஷப் பண்ட், பார்த்தீவ் பட்டேல், அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா.

மேலும் பார்க்க...

First published: November 16, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்