சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார். இதன் மூலம் சச்சின், டிராவிட், கங்குலியின் வரிசையில் இணைந்திருக்கிறார் ரோஹித். வலது கை ஆட்டக்காரரான ரோஹித் சர்மா இந்திய அணியின் வெற்றிகளில் கணிசமாக பங்களித்துள்ளார். 49 டெஸ்ட், 241 ஒருநாள் மற்றும் 148 டி20 போட்டிகள் ஒட்டுமொத்தமாக 483 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள அவர், இன்று புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4 ஆவது டெஸ்டின் 3ஆம் நாள் ஆட்டத்தின்போது இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.
இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 22 ரன்களை எடுத்தபோது, ரோஹித் சர்மா சர்வதேச போட்டிகளில் 17 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார். இதன் அடிப்படையில் அவர் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, தோனி வரிசையில் இணைந்துள்ளார்.
சர்வதேச போட்டிகளில், சச்சின் டெண்டுல்கர் - 34,357, விராட் கோலி* - 25047, ராகுல் டிராவிட் - 24,064, சவுரவ் கங்குலி - 18,433, மகேந்திர சிங் தோனி - 17,092, ரோஹித் சர்மா* - 17,014 – ரன்களை எடுத்துள்ளனர். இவர்களில் கோலியும், ரோஹித் சர்மாவும் மட்டுமே தற்போது விளையாடி வருகிறார்கள். தற்போது டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்பட்டு வருகிறார். இவரது தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து வருகிறது. இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket, Rohit sharma