Home /News /sports /

இன்றைய ஆட்டத்தில் உலக சாதனை படைப்பாரா ரோகித் சர்மா…? இன்னும் 10 ரன்கள்தான் தேவை…

இன்றைய ஆட்டத்தில் உலக சாதனை படைப்பாரா ரோகித் சர்மா…? இன்னும் 10 ரன்கள்தான் தேவை…

ரோகித் சர்மா

ரோகித் சர்மா

Asia Cup 2022 : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானை இன்று எதிர்கொள்கிறது. இன்றைய ஆட்டம் விராட் கோலி பங்கேற்கும் 100வது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா உலக சாதனை படைப்பதற்கு. இன்னும் 10 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. ஆசியக்கோப்பை தொடரில், இன்று பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 10 ரன்களுக்கும் மேல் அடித்து ரோகித் உலக சாதனை படைப்பார் என்று, அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    டி20 போட்டிகளில் நியூசிலாந்து அணியின் தொடக்க பேட்ஸ்மேன் மார்டின் குப்டில் 3,497 ரன்களை குவித்துள்ளார். சர்வதேச அளவில் இதுதான் 20 ஓவர் போட்டிகளில் ஒரு பேட்ஸ்மேன் எடுத்துள்ள அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

    இதற்கு அடுத்த இடத்தில் ரோகித் சர்மா இருக்கிறார். அவர் மொத்தமாக 20 ஓவர் போட்டிகளில் 3 ஆயிரத்து 487 ரன்கள் எடுத்துள்ளார். இன்று பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் நடைபெற உள்ளது.

    Asia Cup 2022 : இன்று நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் மேட்ச்சை எதில் பார்க்கலாம்? விபரம் இதோ…

    இதில் இன்னும் 10 ரன்களை சேர்த்தால், உலகில் 20 ஓவர் போட்டிகளில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா ஏற்படுத்துவார்.

    3-ஆவது இடத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இருக்கிறார். இவர் 3,308 ரன்களை 99 போட்டிகளில் எடுத்துள்ளார். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானை இன்று எதிர்கொள்கிறது. இன்றைய ஆட்டம் விராட் கோலி பங்கேற்கும் 100வது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

    ரிஷப் பண்ட்டை விட தினேஷ் கார்த்திக் சிறந்த தேர்வாக இருப்பார் : இந்தியா – பாக். மேட்ச் குறித்து புஜாரா கருத்து

    சர்வதேச அளவில் இந்தியாவும் - பாகிஸ்தானும் மொத்தம் 9 டி20 ஆட்டங்களில் நேருக்கு நேராக மோதியுள்ளன. இதில் இந்தியா 7 முறையும் பாகிஸ்தான் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் இன்று இரவு இந்திய நேரப்படி 7.30-க்கு இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெற உள்ளது.

    இந்த போட்டியை இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. டிஸ்னி ப்ளஸ்  ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இந்தியா பாகிஸ்தான் மேட்ச்சை நேரலையாக கண்டு ரசிக்கலாம்
    Published by:Musthak
    First published:

    Tags: Asia cup cricket, Cricket, Rohit sharma

    அடுத்த செய்தி