விராத் கோலியின் பேட்டிங் செயல்பாடுகள் மோசமாக உள்ளதாக விமர்சனம் எழுந்துள்ள நிலையில், ஊடகங்கள் அமைதியாக இருந்தால் அனைத்தும் சரியாக நடக்கும் என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா பதிலளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராத் கோலியின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளதாக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது. அண்மையில் நடந்து முடிந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 8, 18, 0 என மொத்தமாகவே 26 ரன்கள் மட்டுமே விராத் கோலி எடுத்திருந்தார். இது விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது. விராத் கோலி கடைசியாக சதம் அடித்து 2 ஆண்டுகள் ஆகிறது என்றும் விமர்சனம் வைக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்திய- மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான மூன்று டி20 போட்டிகள் கொல்கத்தாவில் நாளை தொடங்கவுள்ளது. இதற்கு முன்பாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது, கோலியில் தற்போதைய செயல்பாடு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, நீங்கள் (ஊடகங்கள்) சிறிது நேரம் அமைதியாக இருந்தால், எல்லாம் சரியாக நடக்கும் என்று பதிலளித்தார்.
இதையும் படிங்க: இலங்கை வீரரை சென்னை அணியில் சேர்த்ததற்கு எதிர்ப்பு.. சிஎஸ்கேவை புறக்கணிக்கும் போராட்டம் (Boycott Chennai Super Kings) தொடங்கியது
மேலும், 10 வருடங்களுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் கோலி விளையாடி வருகிறார். அழுத்தமான தருணங்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது அவருக்குத் தெரியும் என்றும் அவர் தெரிவித்தார். இதேபோல் விராத் கோலி குறித்து பேசிய இந்திய அணியின் பேட்டிங்க் பயிற்சியாளர் விக்ரம் ரத்தூர் கோலி , ’ அவர் வலை பயிற்சியின்பொது நன்றாக பேட்டிங் செய்கிறார் மற்றும் அவர் தயார்படுத்தும் விதத்தில் இருக்கிறார். நாங்கள் காத்திருக்கிறோம்... இந்த இன்னிங்ஸ்களில் ஒன்றில் அவர் பழைய நிலைக்கு நிச்சயம் திரும்புவார் என்று குறுப்பிட்டார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.