ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

எங்கு கோட்டைவிட்டோம்... தோல்வி குறித்து கேப்டன் ரோகித் சர்மா விளக்கம்

எங்கு கோட்டைவிட்டோம்... தோல்வி குறித்து கேப்டன் ரோகித் சர்மா விளக்கம்

ரோகித் சர்மா

ரோகித் சர்மா

பந்துவீச்சில் நல்ல தொடக்கம் அமையவில்லை தோல்விக்கு முக்கிய காரணமாக கேப்டன் ரோகித் சர்மா விளக்கம்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    இங்கிலாந்து தொடக்க வீரர்கள் அபாரமாக விளையாடினார்கள். நாங்கள் நன்குப் பந்துவீசியும் பேட்டர்கள் ரன்கள் எடுத்திருந்தால் அதை ஏற்றுக் கொண்டிருப்போம் என இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

    டி20 உலககோப்பையில் இரண்டாவது அரையிறுதி போட்டி இந்தியா -இங்கிலாந்து அணிகள் மோதின. அடிலெய்ட்டில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஹர்திக் பாண்டியாவின் அதிரடியால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்துள்ளது. ஹர்டிக் பாண்டியா 33 பந்துகளில் 63 ரன்கள் விளாசினார்.

    இதனையடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் மற்றும் அலக்ஸ் ஹேல்ஸ் இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர்.  இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 16 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. பட்லர் 80 மற்றும் அலக்ஸ் 86 ரன்கள் குவித்தனர். இதையடுத்து வரும் 13 ஆம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

    இதையும் படிங்க: இந்திய அணி மோசமான பவுலிங்; இங்கிலாந்து 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

    இந்த நிலையில் போட்டி முடிந்த பின்னர் பேசிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில், இன்று நாங்கள் விளையாடிய விதம் ஏமாற்றம் அளிக்கிறது . பேட்டிங்கில் கடைசியில் போராடி நல்ல ஸ்கோரை எடுத்தோம். ஆனால் பந்துவீச்சில் நாங்கள் சரியாக இல்லை. 16 ஓவர்களில் இந்த இலக்கை விரட்டும் அளவுக்கான ஆடுகளமல்ல இது. இன்று நாங்கள் சரியாகப் பந்துவீசவில்லை. நாக் அவுட் ஆட்டங்களில் நெருக்கடியான தருணங்களை எதிர்கொள்வது மிக முக்கியம் என்றார்.

    மேலும் அதை எப்படி எதிர்கொள்வது என யாருக்கும் கற்றுத் தர முடியாது. தனிநபரைப் பொறுத்த விஷயம் இது, பந்துவீச்சில் நல்ல தொடக்கம் அமையவில்லை. இங்கிலாந்து தொடக்க வீரர்கள் நன்கு விளையாடினார்கள். நாங்கள் நன்குப் பந்துவீசியும் பேட்டர்கள் ரன்கள் எடுத்திருந்தால் அதை ஏற்றுக் கொண்டிருப்போம். ஆனால் அதை நாங்கள் செய்யவில்லை என ரோகித் சர்மா விளக்கம் அளித்தார்.

    Published by:Arunkumar A
    First published:

    Tags: India captain Rohit Sharma, India Vs England, T20 World Cup