முகப்பு /செய்தி /விளையாட்டு / டி20, ஒன்டே, டெஸ்ட் போட்டிகளில் நம்பர் ஒன்! சாதனையின் உச்சத்தில் இந்திய அணி

டி20, ஒன்டே, டெஸ்ட் போட்டிகளில் நம்பர் ஒன்! சாதனையின் உச்சத்தில் இந்திய அணி

இந்திய டெஸ்ட்கிரிக்கெட் அணி

இந்திய டெஸ்ட்கிரிக்கெட் அணி

டெஸ்ட் போட்டிகளில் உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்த ஆஸ்திரேலியாவை இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் நாக்பூர் டெஸ்டில் தோற்கடித்தது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, டெஸ்ட் போட்டிகளில் உலகில் நம்பர் ஒன் அணியாக மாறியுள்ளது. ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்தியா முதலிடத்தில் இருந்து வரும் நிலையில், அனைத்து ஃபார்மேட் போட்டிகளிலும் முதலிடத்தை பிடித்து சாதனையின் உச்சத்திற்கு சென்றுள்ளது இந்திய அணி. முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 115 புள்ளிகள் கிடைத்துள்ளன. ஆஸ்திரேலிய அணி 111 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளது. 106 புள்ளிகளுடன் இங்கிலாந்து 3ஆம் இடத்தை பிடித்துள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்த ஆஸ்திரேலியாவை இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் நாக்பூர் டெஸ்டில் தோற்கடித்தது. இந்த வெற்றியின் மூலம் இந்தியாவுக்கு கூடுதல் புள்ளிகள் வழங்கப்பட்டதால் ஆஸ்திரேலிய அணியை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்தை பிடித்தது. இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களை 3-0 என்ற கணக்கில் இழந்திருந்தன. இந்த அதிரடி வெற்றிகளின் மூலம் 114 புள்ளிகள் பெற்று ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி முதலிடத்தை பெற்றது. இதேபோன்று டி20 போட்டிகளில் 267 புள்ளிகளுடன் இந்தியா முதலிடம் வகிக்கிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. இதில் விளையாடவும், நம்பர் ஒன் டெஸ்ட் அணி என்ற பட்டத்தை தக்க வைத்துக் கொள்ளவும் இந்தியா நாளை மறுதினம் தொடங்கும் டெல்லி டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலியாவை வெல்ல வேண்டும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்து வரும் பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி 3-1 அல்லது 4-0 என்ற கணக்கில் வெற்றி பெறும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கணித்துள்ளார்கள். பேட்டிங், பவுலிங் என அனைத்து டிபார்ட்மென்ட்களிலும் இந்திய அணி வலிமையாக காணப்படுவதால் அவ்வளவு எளிதில் அதனை வெல்ல முடியாது என்று கூறப்படுகிறது. இதேபோன்று, இந்திய அணி வீரர்கள் தரவரிசையிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

First published:

Tags: Cricket