• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • விராட் கோலியின் மனிதநேயம்: கொரோனாவால் பாதிக்கப்பட்ட முன்னாள் பெண் கிரிக்கெட்டரின் தாயின் சிகிச்சைக்கு ₹ 6.77 லட்சம் நிதியுதவி..

விராட் கோலியின் மனிதநேயம்: கொரோனாவால் பாதிக்கப்பட்ட முன்னாள் பெண் கிரிக்கெட்டரின் தாயின் சிகிச்சைக்கு ₹ 6.77 லட்சம் நிதியுதவி..

 விராட் கோ

விராட் கோ

ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்பட்ட மறுநாளே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோருக்காக விராட் கோலி உதவ களமிறங்கினார்.

  • Share this:
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனையின் தாயின் சிகிச்சைக்காக கேப்டன் விராட் கோலி நிதியுதவி அளித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை ஈவு இரக்கமின்றி பாதிப்பையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இந்த இக்கட்டான காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்ஸிஜன், மருத்துவ சிகிச்சை, வாழ்வாதாரத்திற்காக சினிமா, விளையாட்டு, தொழில்துறை பிரபலங்கள் உதவி செய்து தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வரும் இந்திய மகளின் அணியின் முன்னாள் வீராங்கனை ஒருவரின் தாயின் சிகிச்சைக்காக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி 6.77 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்திய மகளிர் அணியின் முன்னாள் வீராங்கனை கே.எஸ். ஷ்ரவந்தி நாயுடுவின் பெற்றோர் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருடைய தாயார் எஸ்.கே.சுமன் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். பெற்றோரின் சிகிச்சைக்காக ஏற்கனவே 16 லட்ச ரூபாயை செலவிட்டுள்ள ஷ்ரவந்தி நாயுடு, நிதி நெருக்கடியில் சிக்கியதால் பெற்றோரின் சிகிச்சைக்கு தேவைப்படும் பணத்தை புரட்ட முடியாமல் திணறினார். பெற்றோரின் சிகிச்சைக்கு உதவிடுமாறு பிசிசிஐ மற்றும் ஹைதராபாத் கிரிக்கெட் அசோசியேசனிடமும் உதவி கோரினார் ஸ்ரவந்தி நாயுடு.

இதனிடையே பிசிசிஐயின் முன்னாள் தெற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் (மகளிர் கிரிக்கெட்) வித்யா யாதவ் தன்னுடைய ட்விட்டரில் ஸ்ரவந்தி நாயுடுவின் தாயாரின் நிலை குறித்து எடுத்துரைத்து நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார்.
ட்விட்டரில் வித்யா வெளியிட்ட பதிவில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலியையும் அவர் டேக் செய்தார். வித்யா யாதவ், முன்னாள் பிசிசிஐ தலைவர் ஷிவ்லால் யாதவின் சகோதரி ஆவார்.

ட்விட்டரில் இந்த பதிவை பார்த்த கேப்டன் விராட் கோலி, ஷ்ரவந்தி நாயுடுவின் தாயுடைய கொரோனா சிகிச்சைக்காக 6.77 லட்ச ரூபாய் நிதியுதவி  வழங்கியுள்ளார்.

“நேர்மையாக கூறுகிறேன், விராட் கோலியின் இந்த உடனடி உதவியை கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். இவ்வளவு பெரிய கிரிக்கெட் வீரரிடமிருந்து இவ்வளவு பெரிய அணுகுமுறை ” வெளிப்பட்டுள்ளதாக வித்யா யாதவ் சிலாகித்து கூறுகிறார்.

ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்பட்ட மறுநாளே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோருக்காக விராட் கோலி உதவ களமிறங்கினார். இதற்காக அறக்கட்டளையின் மூலம் 7 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளார் கோலி, அவர் ஏற்கனவே அந்த அறக்கட்டளைக்கு 2 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.

ஷ்ரவந்தி நாயுடுவின் பெற்றோருக்கான சிகிச்சைக்கு தேவைப்படும் நிதியை திரட்டுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ள வித்யா யாதவின் முயற்சிகள் மூலம் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் ஷ்ரவந்தி நாயுடுவின் பெற்றோர் சிகிச்சைக்காக 3 லட்ச ரூபாய் தர ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் 2 லட்ச ரூபாயை அளிக்கவும் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: