ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்டிலும் ரோகித் சர்மா பங்கேற்க வாய்ப்பில்லை… விரைவில் அறிவிப்பு வெளியாகிறது…

வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்டிலும் ரோகித் சர்மா பங்கேற்க வாய்ப்பில்லை… விரைவில் அறிவிப்பு வெளியாகிறது…

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

அடுத்து வரும் கிரிக்கெட் தொடர்களை கவனத்தில் கொண்டு ரோகித் சர்மா தற்போது ஓய்வு எடுக்க வேண்டும் என்று பிசிசிஐ கருதுகிறது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பங்கேற்க வாய்ப்பில்லை என தகவல்கள் வெளிவந்துள்ளன இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ விரைவில் வெளியிடுகிறது

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது காயம் அடைந்தார். இடது கை பெருவிரலில் ஏற்பட்ட காயம் காயத்தால் அவதிப்பட்ட ரோகித், கடைசி நேரத்தில் களத்தில் இறங்கி அணியின் வெற்றிக்காக போராடினார்.

இந்த போட்டியில் 28 பந்துகளை எதிர்கொண்டு 5 சிக்சர் 3 பவுண்டரிகளுடன் 51 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இருப்பினும் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றியை தவற விட்டது. அடுத்து நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் ரோகித் பங்கேற்கவில்லை.

கடைசிப் போட்டியில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தொடரை இழந்தாலும் இந்திய அணி மிகச்சிறிய வித்தியாசத்தில்தான் இரு ஒருநாள் போட்டிகளில் தோல்வி அடைந்தது.

'தொடர்ந்து விளையாடுவேன்'.. ஓய்வு அறிவிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த மெஸ்ஸி.. கொண்டாடும் ரசிகர்கள்!

தற்போது மும்பையில் ரோகித் சர்மா காயத்திற்காக சிகிச்சை எடுத்து வருகிறார். இதன் காரணமாக அவர் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் சில வாரங்களுக்கு ஓய்வில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

2ஆவது ஒருநாள் போட்டியில் காயத்துடன் ரோகித் வெளியேறி இருந்தால் அதிக பாதிப்பு ஏற்பட்டிருக்காது என்றும், அதன் பின்னரும் அவர் விளையாடியதால் கொஞ்சம் சீரியஸான காயம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வளவு பெரிய பிஸினஸா கால்பந்து? பிபாவின் வருமானத்தைக் கேட்டால் தலையே சுத்தும்!

சில நாட்களுக்கு முன்பாக ரோஹித்சர்மா இரண்டாவது டெஸ்டில் நிச்சயம் பங்கேற்பார் என்று தகவல்கள் வெளிவந்தன. ஆனால் தற்போதைய நிலவரப்படி அவர் மேலும் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அடுத்துவரும் ஆட்டங்களை கவனத்தில் கொண்டு, ரோகித் சர்மா தற்போது ஓய்வு எடுப்பது தான் சிறந்தது என பிசிசிஐ கருதுகிறது.

இந்த காரணங்களால் ரோகித் சர்மா வரும் வியாழன் அன்று தொடங்க உள்ள வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. இது தொடர்பான அறிவிப்பை பிசிசிஐ விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Cricket, India vs Bangladesh