ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்டில் இணையும் ரோகித் சர்மா… விரைவில் அறிவிப்பு வெளியாகிறது…

வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்டில் இணையும் ரோகித் சர்மா… விரைவில் அறிவிப்பு வெளியாகிறது…

ரோகித் சர்மா

ரோகித் சர்மா

தற்போது இந்தியஅணியின் முக்கிய வீரர்களான ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு முதுகிலும், முகம்மது ஷமிக்கு தோளிலும், ரவிந்திரா ஜடேஜாவுக்கு முழங்காலிலும் காயம் ஏற்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வங்க தேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா இடம்பெறுவார் என தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளது.

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது காயம் அடைந்தார். பெருவிரலில் ஏற்பட்ட காயம் காயத்தால் அவதிப்பட்ட ரோகித், கடைசி நேரத்தில் களத்தில் இறங்கி அணியின் வெற்றிக்காக போராடினார்.

இந்த போட்டியில் 28 பந்துகளை எதிர்கொண்டு 5 சிக்சர் 3 பவுண்டரிகளுடன் 51 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இருப்பினும் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றியை தவற விட்டது. அடுத்து நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் ரோகித் பங்கேற்கவில்லை.

கடைசிப் போட்டியில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தொடரை இழந்தாலும் இந்திய அணி மிகச்சிறிய வித்தியாசத்தில்தான் இரு ஒருநாள் போட்டிகளில் தோல்வி அடைந்தது.

ரஞ்சி கோப்பை தொடரில் கலக்கும் இஷான் கிஷன்… சதம் அடித்து அசத்தல்

தற்போது மும்பையில் ரோகித் சர்மா காயத்திற்காக சிகிச்சை எடுத்து வருகிறார். இதன் காரணமாக அவர் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் சில வாரங்களுக்கு ஓய்வில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

2ஆவது ஒருநாள் போட்டியில் காயத்துடன் ரோகித் வெளியேறி இருந்தால் அதிக பாதிப்பு ஏற்பட்டிருக்காது என்றும், அதன் பின்னரும் அவர் விளையாடியதால் கொஞ்சம் சீரியஸான காயம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கில், புஜாரா சதம் அடித்து அசத்தல்: 512 ரன்களில் இந்திய அணி டிக்ளேர்

இந்த நிலையில் வரும் 22ஆம் தேதி தொடங்கும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா பங்கேற்பார் என தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இந்தியஅணியின் முக்கிய வீரர்களான ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு முதுகிலும், முகம்மது ஷமிக்கு தோளிலும், ரவிந்திரா ஜடேஜாவுக்கு முழங்காலிலும் காயம் ஏற்பட்டுள்ளது.

First published:

Tags: Rohit sharma