ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

பலே திட்டங்களுடன் ஆஸ்திரேலிய செல்லும் இந்தியா: டி20 உலகக்கோப்பை தொடருக்கு கேப்டன் ரோகித் சர்மாவின் சூப்பர் பிளான்!!..

பலே திட்டங்களுடன் ஆஸ்திரேலிய செல்லும் இந்தியா: டி20 உலகக்கோப்பை தொடருக்கு கேப்டன் ரோகித் சர்மாவின் சூப்பர் பிளான்!!..

மாதிரி படம்

மாதிரி படம்

ஆஸ்திரேலிய மைதானத்தில் நல்ல பயிற்சிகளை மேற்கொண்டு அப்போழுது அணியில் யாருக்கு இடம் கிடைக்கும் என்பதை அங்கு சென்று முடிவு செய்வோம் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  டி20 உலககோப்பை தொடரில் பங்கேற்ற இந்திய அணி ஏன் விரைவாக ஆஸ்திரேலியாவுக்கு செல்கிறோம் என இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா விளக்கமளித்துள்ளார்.

  தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரை முடிந்துள்ள நிலையில், ஒருநாள் தொடருக்கு ஷிகர் தவான் தலைமையிலான புதிய அணி விளையாடுகிறது. இந்த நிலையில் வரும் 16ஆம் தேதி தொடங்கும் டி20 உலககோப்பை தொடருக்காக இந்திய அணி விரைவில் ஆஸ்திரேலிய செல்லவுள்ளது. இந்த நிலையில் இந்திய அணி ஏன் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மாற்று அணியை அறிவித்து ஆஸ்திரேலிய செல்கிறது என இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.

  இது குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், இப்போது இருக்கும் 7 முதல் 8 வீரர்களுக்கு ஆஸ்திரேலியா புதிய களம், அதனால் தான் விரைவாக ஆஸ்திரேலியாவுக்கு செல்கிறோம். 15 வீரர்களில் 8 வீரர்கள் இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவில் விளையாடிருக்கிறார்கள் மற்ற வீரர்களுக்கு ஆஸ்திரேலிய மைதானங்களில் அனுபவம் இல்லை .

  இதையும் படிங்க: என் இடத்துக்கு வேட்டு வைச்சுருவார் போல... தினேஷ் கார்த்தி அதிரடியை வியந்து பாராட்டிய சூர்யகுமார் யாதவ்

  முதலில் பெர்த் சென்று அங்கு பவுன்ஸிங் பிட்சில் என்ன செய்ய முடியும் என்பதை பார்க்க போகிறோம். இரண்டு பயிற்சி ஆட்டங்களில் ஆட உள்ளோம். வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு பேரிழப்பு தான், ஆனால் மாற்றாக நம்மிடம் நல்ல பவுலர்கள் இருப்பதாக ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய மைதானத்தில் நல்ல பயிற்சிகளை மேற்கொண்டு அப்போழுது அணியில் யாருக்கு இடம் கிடைக்கும் என்பதை அங்கு சென்று முடிவு செய்வோம் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

  உலகக்கோப்பை அணியில் இடம் பிடித்த இந்திய அணி வருமாறு: ரோஹித் சர்மா (கேப்டன்), ராகுல் ( துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஸ்வின், செஹல், அக்சர் படேல், , புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.

  ஸ்டாண்ட் பை வீரர்கள்: முகமது ஷமி, ஸ்ரேயஸ் அய்யர், ரவி பிஷ்னாய், தீபக் சாஹர்

  Published by:Arunkumar A
  First published:

  Tags: BCCI, India captain Rohit Sharma, T20 World Cup