ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஒருநாள் போட்டிகளில் 3 ஆண்டுகளுக்கு பின்னர் சதம் அடித்த ரோஹித் சர்மா… விமர்சனங்களுக்கு பதிலடி…

ஒருநாள் போட்டிகளில் 3 ஆண்டுகளுக்கு பின்னர் சதம் அடித்த ரோஹித் சர்மா… விமர்சனங்களுக்கு பதிலடி…

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

கடைசியாக 2020 ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூருவில் நடந்த ஆட்டத்தில் ரோஹித் சர்மா சதம் அடித்திருந்தார்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒருநாள் போட்டிகளில் 3 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சதம் அடித்து விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார். பேட்ஸ்மேனாக கடந்த பல போட்டிகளில் அவர் சிறப்பாக செயல்படாத நிலையில், அவரது கேப்டன்ஷிப் அற்புதமாக அமைந்தது. இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 3-0 என்ற கணக்கில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி இருந்தது. தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. இந்நிலையில் 3 ஆவது ஒருநாள் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தபோது தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, சுப்மன் கில் களத்தில் இறங்கினர்.

தொடக்கத்தில் 6 ஓவர்கள் வரையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அதன்பின்னர் டி20 மேட்ச்சைப் போல விளையாடத் தொடங்கினர். அணியின் ஸ்கோர் உயர உயர ரோஹித் சர்மா சதம் அடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்பட்டது. அதனை நிறைவேற்றும் வகையில் ரோஹித் சதம் அடித்து அசத்தினார். இது 3 ஆண்டுகளுக்கு பின்னர் அவர் அடிக்கும் முதல் சதம் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 2020 ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூருவில் நடந்த ஆட்டத்தில் ரோஹித் சர்மா சதம் அடித்திருந்தார். இதன்பின்னர் அவர் செஞ்சூரி அடிக்காததால் பல்வேறு தரப்பினர் அவரை விமர்சித்து வந்தனர். இந்நிலையில் இன்று தன் மீதான விமர்சனங்களுக்கு ரோஹித் சர்மா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இன்றைய சதத்துடன் சேர்த்து அவர் ஒருநாள் போட்டிகளில் 30 சதங்களை விளாசியுள்ளார்.

இன்றைய போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 2 மாற்றங்களை செய்துள்ளார். முகம்மது ஷமி மற்றும் சிராஜுக்கு இன்றைய போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக உம்ரான் மாலிக் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் விளையாடுகின்றனர். இன்றைய ஆட்டத்தில் விளையாடும் இந்திய அணி வீரர்கள்ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், உம்ரான் மாலிக். நியூசிலாந்து அணி வீரர்கள்- ஃபின் ஆலன், டெவோன் கான்வே, ஹென்றி நிக்கோல்ஸ், டேரில் மிட்செல், டாம் லாதம்(விக்கெட் கீப்பர்/கேப்டன் ), க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர், லாக்கி பெர்குசன், ஜேக்கப் டஃபி, பிளேயர் டிக்னர்

First published:

Tags: Cricket