ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

‘ஒரேயொரு தவறை ரோஹித் சர்மா செய்துவிட்டார்…’ – முன்னாள் வீரர் விமர்சனம்

‘ஒரேயொரு தவறை ரோஹித் சர்மா செய்துவிட்டார்…’ – முன்னாள் வீரர் விமர்சனம்

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை இந்தூரில் நடைபெறுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஒரேயொரு தவறை செய்துவிட்டதாக முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறியுள்ளார். இந்த போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 34.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் 108 ரன்கள் எடுத்தது. இதையடுத்து விளையாடிய இந்திய அணி 20.1 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்ததால் மிகப்பெரிய வெற்றியை அணி பெற்றது.

பேட்டிங்கின்போது கேப்டன் ரோஹித் சர்மா 50 பந்துகளில் 2 சிக்சர் 7 பவுண்டரியுடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சுப்மன் கில் 40 ரன்களுடனும், இஷான் கிஷன் 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்த போட்டியில் ரோஹித் சர்மா எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். ஆட்டத்தின் 15 ஆவது ஓவரை ஷிப்லே வீசியபோது, ரோஹித்தின் விக்கெட் இழக்கப்பட்டது. இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் இர்பான் பதான் கூறியதாவது- நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரோஹித் சர்மா ஒரேயொரு தவறை செய்துவிட்டார்.

ஷிப்லே வீசிய பந்து அவரது பேடில் பட்டபோது, டி.ஆர்.எஸ். முறைக்கு அப்பீல் செய்திருக்கலாம். மற்றபடி, ரோஹித் சர்மா அனைத்தையும் சிறப்பாக செய்து முடித்து விட்டார். ஒரு சிலர் அவரது ஃபார்ம் குறித்து விமர்சிக்கிறார்கள். தற்போதுதான் நியூசிலாந்து அணிக்கு எதிராக தனது முதல் அரை சதத்தை ரோஹித் எடுத்துள்ளார். அவரது கம்பேக் அற்புதமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். நியூசிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை இந்தூரில் நடைபெறுகிறது.

First published:

Tags: Cricket