ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

அதிக சிக்சர்களை அடித்த இந்திய பேட்ஸ்மேன்… தோனியின் சாதனையை முறிடியத்த ரோஹித் சர்மா…

அதிக சிக்சர்களை அடித்த இந்திய பேட்ஸ்மேன்… தோனியின் சாதனையை முறிடியத்த ரோஹித் சர்மா…

தோனி - ரோஹித் சர்மா

தோனி - ரோஹித் சர்மா

இலங்கை அணிக்கு எதிராக நடந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அதிக சிக்சர்கள் அடித்த இந்திய பேட்ஸ்மேன்களில், தோனியின் சாதனையை ரோஹித் சர்மா இன்று முறியடித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தோனி அடித்த 123 சிக்சர்களே, இந்திய பேட்ஸ்மேன் அடித்த மிக அதிக எண்ணிக்கையாக இருந்துவந்தது. இதனை ரோஹித் சர்மா சமன் செய்திருந்த நிலையில், இன்று நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரோஹித் 2 சிக்சர்களை விளாசினார். இதன் மூலம் தோனியின் சாதனையை ரோஹித் சர்மா பின்னுக்கு தள்ளியுள்ளார். இந்த சாதனையை ஏற்படுத்துவதற்கு ரோஹித் சர்மாவுக்கு 238 மேட்ச்சுகள் தேவைப்பட்டுள்ளன.

அதிக சிக்சர் அடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் பட்டியலில் 125 சிக்சர்களுடன் ரோஹித் சர்மா முதலிடத்திலும், 123 சிக்சர்களுடன் மகேந்திர சிங் தோனி இரண்டாவது இடத்திலும் உள்ளனர். கிரிக்கெட் லெஜெண்ட் சச்சின் டெண்டுல்கர் 71 சிக்சர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். அடுத்த இடத்தில் யுவராஜ் சிங் இருக்கிறார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ரோஹித் ஷர்மா 10,000 ரன்களை கடந்துள்ளார். இவற்றில் 29 சதங்கள் அடங்கும்.

நியூசிலாந்துக்கு எதிராக இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், ஐந்தாவது ஓவரை ஹென்றி ஷிப்லே வீசினார். அந்த ஓவரில் சிக்சர் அடித்து தோனியின் சாதனையை ரோஹித் சர்மா முறியடித்தார். இலங்கை அணிக்கு எதிராக நடந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. தற்போது நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கியுள்ளது. இதனையும் இந்திய அணி கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

இந்த ஆண்டு இறுதியில் உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதனால் இந்திய அணி அடுத்து விளையாடிய கூடிய ஒவ்வொரு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளும், முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த உலக கோப்பை தொடர் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு இறுதி உலக கோப்பையாக இருக்கக் கூடும் என்று கருதப்படுவதால், இவ்விரு வீரர்களும் இந்த தொடரில் தங்களது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Cricket, MS Dhoni, Rohit sharma