உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்திய கேப்டன் மிதாலி ராஜ் உலக சாதனை படைத்துள்ளார்.
12-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் நியூசிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. ஹாமில்டன் நகரின் செடான் மைதானத்தில் நடைபெற்று வரும் இன்றைய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்தியா எதிர்கொண்டு விளையாடுகிறது.
இந்த போட்டியில் கேப்டனாக பங்கேற்பதன் மூலம் இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் உலக சாதனை படைத்துள்ளார். இன்றைய போட்டியுடன் அவர் உலகக்கோப்பை தொடர்களில் 24-வது போட்டிக்கு கேப்டனாக இருந்துள்ளார்.
இதற்கு முன்பாக ஆஸ்திரேலிய வீராங்கனை பெலிண்டா கிளார்க், உலகக்கோப்பை போட்டி தொடர்களில் 23- போட்டிகளில் கேப்டனாக இருந்ததே உலக சாதனையாக இருந்தது. அதனை 39 வயதாகும் மிதாலி ராஜ் முறியடித்துள்ளார்.
இதையும் படிங்க -
IPL 2022: பெரிய பவுலரை கோச் ஆக ஒப்பந்தம் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ்
உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை 2 ஆட்டங்களில் விளையாடியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியது.
நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தின்போது முதலில் பேட் செய்த நியூசிலாந்து 50 ஓவர்களில் 2611 ரன்களை எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 198 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
இதையும் படிங்க -
IPL 2022 CSK: தோனியின் அட்வைஸ்: யு-19 உலகக்கோப்பை ஸ்டார் ஹங்கர்கேகரின் பெரிய சிக்ஸர்கள்- வீடியோ
இன்றைய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 317 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோர் சதம் அடித்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.