ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஐசிசி தரவரிசை பட்டியல்…. நம்பர் ஒன் இடத்தை பிடித்த முகம்மது சிராஜ்…

ஐசிசி தரவரிசை பட்டியல்…. நம்பர் ஒன் இடத்தை பிடித்த முகம்மது சிராஜ்…

முகம்மது சிராஜ்

முகம்மது சிராஜ்

பந்துவீச்சாளர்களுக்கான தர வரிசைப் பட்டியலில் முதல் 10 இடத்தில், சிராஜை தவிர்த்து இந்திய அணி வீரர்கள் யாரும் இல்லை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான பவுலர்கள் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இதில் முன்னணி பந்துவீச்சாளர்களை பின்னுக்கு தள்ளி இந்திய அணியின் முகம்மது சிராஜ் முதலிடத்தை பிடித்துள்ளார். உலகின் மிகச்சிறந்த பவுலர்களாக கருதப்படும் ஆஸ்திரேலிய அணியின் ஜோஷ் ஹசல்வுட், நியூசிலாந்தின் ட்ரென்ட் போல்ட் ஆகியோரை பின்னுக்கு தள்ளி சிராஜ் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். கடந்த ஓராண்டாக ஒருநாள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், அவருக்கு முதலிடத்தை வழங்கி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி கவுரவித்துள்ளது.

ஐசிசி தரவரிசை பட்டியலில் 729 புள்ளிகளுடன் சிராஜ் முதலிடத்தில் உள்ளார். அடுத்த இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் ஜோஷ் ஹசல்வுட் 2 ஆவது இடத்திலும்,708 புள்ளிகளுடன் ட்ரென்ட் போல்ட் 3 ஆவது இடத்திலும் உள்ளனர். நடந்து முடிந்த இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் சிராஜ் 9 விக்கெட்டுகளை எடுத்தார். நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். நியூசிலாந்துக்கு எதிரான தொடரை முழுமையாக கைப்பற்றிய பின்னர் பேட்டியளித்த ரோஹித் சர்மா, இதற்கு சிராஜின் பந்துவீச்சு முக்கிய காரணம் என்று கூறியிருந்தார்.

பந்துவீச்சாளர்களுக்கான தர வரிசைப் பட்டியலில் முதல் 10 இடத்தில், சிராஜை தவிர்த்து இந்திய அணி வீரர்கள் யாரும் இல்லை. 20 ஆவது இடத்தில் 594 புள்ளிகளுடன் குல்தீப் யாதவ் உள்ளார். ஜஸ்பிரித் பும்ரா 569 புள்ளிகளுடன் 24 ஆவது இடத்தில் உள்ளார். ஷமி 3 இடங்கள் பின்னுக்கு சென்று 32 இடத்தில் இருக்கிறார். ஷர்துல் தாகூருக்கு 35 ஆவது இடம் அளிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Cricket