டெஸ்ட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலியின் சாதனையை முறியடித்து கிரிக்கெட் விளையாடி கிரிக்கெட் உலகை பந்துவீச்சாளர் முகமது ஷமி அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி நேற்று முன்தினம் நாக்பூரில் தொடங்கி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸின்போது 47 பந்துகளை எதிர்கொண்ட பவுலர் முகமது ஷமி 37 ரன்களை எடுத்தார். இவற்றில் 3 சிக்சர்கள் அடங்கும். இதன் அடிப்படையில் விராட் கோலியின் சாதனையை ஷமி முறியடித்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். இந்த 3 சிக்சர்களின் மூலம் டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 25 சிக்சர்களை அடித்துள்ளார் முகமது ஷமி. இதன் மூலம் 24 சிக்சர்களை அடித்த விராட் கோலியை அவர் பின்னுக்கு தள்ளியுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்சர்களை அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் 90 சிக்சர்களுடன் வீரேந்தர் சேவாக் முதலிடத்தில் இருக்கிறார். அடுத்த இடத்தில் 78 சிக்சர்களுடன் தோனியும், 3ஆவது இடத்தில் 69 சிக்சர்களுடன் சச்சின் டெண்டுல்கரும், 4ஆவது இடத்தில் 66 சிக்சர்களுடன் ரோஹித் சர்மாவும் உள்ளனர். இதற்கு அடுத்தடுத்த இடங்களில் கபில் தேவ் (61), சவுரவ் கங்குலி (57), ரிஷப் பந்த் (55), ரவிந்திரா ஜடேஜா (55), ஹர்பஜன் சிங் (42), நவ்ஜோத் சிங் சித்து (38), அஜிங்க்யா ரஹானே (34), முரளி விஜய் (33), மயங்க் அகர்வால் (28), ஜாகீர் கான் (28), சுனில் கவாஸ்கர் (26), முகம்மது ஷமி (25), விராட் கோலி (24 சிக்சர்கள்) ஆகியோர் உள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket, Mohammed Shami, Virat Kohli