முகப்பு /செய்தி /விளையாட்டு / டி20-க்கான ஐசிசி தரவரிசைப் பட்டியல்… புதிய உச்சம் தொட்டார் சூர்ய குமார் யாதவ்

டி20-க்கான ஐசிசி தரவரிசைப் பட்டியல்… புதிய உச்சம் தொட்டார் சூர்ய குமார் யாதவ்

சூர்ய குமார் யாதவ்

சூர்ய குமார் யாதவ்

டி20 பேட்ஸ்மேனுக்கான தர வரிசையில் தென்னாப்பிரிக்காவின் டேவிட் மாலன் அதிகபட்சமாக 915 புள்ளிகளைப் பெற்றிருந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

டி20 பேட்ஸ்மேனுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் அதிக புள்ளிகளைப் பெற்று இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் புதிய உச்சத்தை தொட்டுள்ளார். இந்திய அணியின் பேட்ஸ்மேன் சூர்ய குமார் யாதவ் டி20க்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். 20 ஓவர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் தொடர்சியாக ரன்களை குவித்து வருவதால் சூர்ய குமார் மீதான ரசிகர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 47 ரன்கள் எடுத்தார். 2ஆவது போட்டியில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுடன் முக்கியமான தருணத்தில் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து அணி வெற்றிபெற காரணமாக இருந்தார்.

இந்த நிலையில் ஐசிசி அவருக்கு 910 புள்ளிகளை டி20 பேட்ஸ்மேனுக்கான தரவரிசையில் அளித்துள்ளது. இந்த புள்ளி அவர் எட்டியிருக்கு உச்சபட்சம் என்பதால் வாழ்த்துகளை குவிந்து வருகிறது. சூர்யா தனது சிறப்பான ஆட்டத்தை இன்று நடக்கும் கடைசி டி20 போட்டியிலும் வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டி20 பேட்ஸ்மேனுக்கான தர வரிசையில் தென்னாப்பிரிக்காவின் டேவிட் மாலன் அதிகபட்சமாக 915 புள்ளிகளைப் பெற்றிருந்தார். விரைவில் இந்த சாதனையை சூர்யகுமார் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2022- ஆம் ஆண்டுக்கான டி20 போட்டியின் சிறந்த கிரிக்கெட் வீரராக சூர்ய குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. தொடரை வெல்வது யார் என்பதை தீர்மானிக்கு கடைசி டி20 கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் இன்று நடைபெறுகிறது.

First published:

Tags: Cricket