முகப்பு /செய்தி /விளையாட்டு / ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டிலும் ஷ்ரேயாஸ் பங்கேற்க வாய்ப்பில்லை… மாற்று வீரர் யார்?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டிலும் ஷ்ரேயாஸ் பங்கேற்க வாய்ப்பில்லை… மாற்று வீரர் யார்?

ஷ்ரேயாஸ் ஐயர்

ஷ்ரேயாஸ் ஐயர்

முன்னதாக காயத்திலிருந்து மீண்ட ஆல்ரவுண்டர் ஜடேஜா, ரஞ்சி கோப்பை தொடரில் தமிழ்நாடு அணிக்கு எதிராக விளையாடி தனது திறமையை நிரூபித்தார்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியின் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் அய்யர் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் முதல் போட்டியில் பங்கேற்காமல் இருந்த நிலையில் 2ஆவது போட்டியிலும் அவர் பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக முதல் போட்டியில் விளையாடிய சூர்ய குமார் யாதவ் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இந்நிலையில், 2ஆவது டெஸ்டில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா அல்லது நல்ல ஃபார்மில் இருக்கும் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை சந்தித்துள்ள நிலையில் அதிலிருந்து மீள்வதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி டெல்லியில் வரும் 17ஆம் தேதி தொடங்கவுள்ளது. முதுகில் காயம் ஏற்பட்டுள்ள ஷ்ரேயாஸ் அய்யர் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்று வருகிறார். காயத்திலிருந்து ஓரளவு குணம் அடைந்தாலும், ஷ்ரேயாஸ் உள்ளூர்  போட்டிகளில் விளையாடி தனது உடல் தகுதி மற்றும் ஆட்டத்திறனை நிரூபிக்க வேண்டியுள்ளது.

மார்ச் 1ஆம் தேதி இரானி கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இதில ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் ஷ்ரேயாஸ் இடம்பெறுவார் என்றும் மத்திய பிரதேச அணிக்கு எதிராக அவர் விளையாடுவார் என்றும் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் அவர் 3ஆவது டெஸ்ட் போட்டியிலும் விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதாகவே தெரிகிறது. முன்னதாக காயத்திலிருந்து மீண்ட ஆல்ரவுண்டர் ஜடேஜா, ரஞ்சி கோப்பை தொடரில் தமிழ்நாடு அணிக்கு எதிராக விளையாடி தனது திறமையை நிரூபித்தார். 2அவது டெஸ்ட் போட்டியில் ஷ்ரேயாஸ் அய்யருக்கு பதிலாக மீண்டும் சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா அல்லது சுப்மன் கில் களத்தில் இறக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது. இதற்கிடையே, அணியில் இடம்பெற்றுள்ள மூத்த வீரர் கே.எல். ராகுல் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். டெல்லி டெஸ்டில் அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் கூறியுள்ளனர். இதனால் இந்திய அணியின் ஆடும் லெவென் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

First published:

Tags: Cricket