கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜெய்னி மாகாளி கோயிலில் மனைவி அதியாவுடன் சாமி தரிசனம் செய்தார். கடந்த சில மாதங்களாக அவர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், இந்த தரிசனத்தை அவர் மேற்கொண்டுள்ளார். கே.எல். ராகுல் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், அவருக்கு ஏன் மீண்டும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு அணி நிர்வாகம், கேப்டன், பயிற்சியாளர் உள்ளிட்டோர் அளிக்கும் விளக்கங்கள் ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் அமையவில்லை.
கடந்த ஆண்டு ராகுல் ஒரே ஒரு அரைச்சதம் மட்டுமே அடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2 டெஸ்டில் நடந்த 3 இன்னிங்ஸ்களில் ராகுல் மொத்தம் 38 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். இதனால் அவரை ஆடும் லெவனில் இருந்து நீக்கிவிட்டு சுப்மன் கில் அல்லது சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தூரில் நடக்கும் மூன்றாவது டெஸ்டில் கே.எல். ராகுல் விளையாடமாட்டார் என்று சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளிவந்தது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு கே.எல். ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது அவரிடமிருந்து துணை கேப்டன் பொறுப்பு தற்போது நீக்கப்பட்டுள்ளது.
KL Rahul and Athiya Shetty at the Mahakaleshwar Jyotirlinga Temple. pic.twitter.com/KQ1q04nuYg
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 26, 2023
அடுத்த துணை கேப்டனாக ரவிந்திர ஜடேஜா அல்லது ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கே.எல்.ராகுல் தனது மனைவி அதியாவுடன் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜெய்னில் உள்ள மாகாளி கோயிலில் இன்று சாமி தரிசனம் மேற்கொண்டார். இதுதொடர்பான வீடியோ ராகுலின் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket