• HOME
 • »
 • NEWS
 • »
 • sports
 • »
 • உறங்காத இரவுகள்.. ஒன்றரை வருட வேதனை -ஜடேஜா ஷேரிங்ஸ்

உறங்காத இரவுகள்.. ஒன்றரை வருட வேதனை -ஜடேஜா ஷேரிங்ஸ்

ஜடேஜா.

ஜடேஜா.

2017-18 காலக்கட்டம் ஜடேஜா கிரிக்கெட் கேரியரில் மிகவும் மோசமான ஆண்டுகள். இந்திய அணியில் இடம் கிடைத்திருந்தாலும் அவரால் ப்ளேயிங் லெவனில் இடம்பெறமுடியவில்லை.

 • Share this:
  ஜடேஜா... களத்தில் எப்போதும் துருதுருவென இருக்கும் வீரர். பேட்டிங்.. பவுலிங், ஃபீல்டிங் என எதாவது ஒரு ரூபத்தில் அணிக்கு தன்னால் ஆன பங்களிப்பை அளிக்கக்கூடியவர். ரன்அவுட்களில் ஸ்டெம்புகளை தகர்ப்பதில் கில்லாடி. ஜடேஜா இருக்கும் திசைக்கும் பந்துபோனால் சிங்கிள் எடுக்கவே தயங்குவார்கள். பருந்து தனது இரையை குறிவைப்பது போல் ஜடேஜாவின் கண்கள் ஸ்டெம்புகளை நோக்கி இருக்கும். சின்ன டைமிங் கிடைத்தாலும் விக்கெட் வேட்டையாடிவிடுவார்.

  பந்துவீச வருவதும் தெரியாது போவதும் தெரியாது. பேட்டிங்கிலும் பலே கில்லாடி. ஜடேஜா ஒரு எனர்ஜி பூஸ்டர். மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணியில் ஜடேஜா தவிர்க்க முடியாத நபராக திகழ்ந்து வருகிறார். இந்திய அணியின் ஆல்ரவுண்டராக ஜொலித்து வருகிறார்.

  ஒரு காலத்தில் இந்திய அணியில் ப்ளேயிங் லெவனில் சேரவே போராடி காலமும் ஜடேஜாவுக்கு உண்டு. தூங்காத இரவுகளை தற்போது ஜடேஜா நினைவுக்கூர்ந்துள்ளார். 2017-18 காலக்கட்டம் ஜடேஜா கிரிக்கெட் கேரியரில் மிகவும் மோசமான ஆண்டுகள். இந்திய அணியில் இடம் கிடைத்திருந்தாலும் அவரால் ப்ளேயிங் லெவனில் இடம்பெறமுடியவில்லை.

  இதுகுறித்து பேசியுள்ள ஜடேஜா, “ உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் 2017 -18 காலகட்டத்தில் பல இரவுகள் நான் தூக்கத்தை தொலைத்தேன். அந்த ஒன்றரை வருடங்கள் இரவு பொழுதில் தூங்கவே சிரமப்பட்டேன். அதிகாலை 4 மணிக்கெல்லாம் எழுந்து அடுத்து என்ன செய்யப்போகிறோம் என யோசிக்க தொடங்கினேன். எப்படி இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் இருந்து மீண்டெழுவது என்பது குறித்து சிந்திக்கத் தொடங்கினேன். என்னால் தூங்கவே முடியவில்லை. நான் படுத்திருப்பேன் ஆனால் தூங்க முடியாது.

  நான் டெஸ்ட் ஸ்குவாடில் இருந்தேன் அணியில் ஆனால் நிறைய போட்டிகளில் விளையாடவில்லை. ஒருநாள் போட்டிகளிலும் நான் விளையாடவில்லை. உள்ளூர் தொடர்களிலும் என்னால் விளையாட முடியாமல் போனது. இந்திய அணியுடன் பயணித்ததால் உள்ளூர் தொடர்களில் விளையாட முடியவில்லை. என்னுடைய திறமையை வெளிக்காட்ட எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் திரும்ப எப்படி கம்பேக் கொடுப்பது என்பது குறித்தே சிந்தித்துக்கொண்டே இருந்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.

  இங்கிலாந்து தொடர் தான் தன் வாழ்க்கையை மாற்றியதாகும் தனக்கு நம்பிக்கை அளித்ததாகவும் ஜடேஜா குறிப்பிட்டுள்ளார். 2018ஆம் ஆண்டு கடையில் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 160/6 எனத் திணறிக்கொண்டிருந்தபோது, 150 பந்துகளுக்கு மேல் சமாளித்து ஜடேஜா 86 ரன்களை எடுத்து தனது ஃபார்மை நீருபித்துகாட்டினார். அந்த போட்டிதான் என்னை முழுமையாக மாற்றியது. என்னுடைய பர்ஃபார்மென்ஸ் மற்றும் நம்பிக்கை அதிகரித்தது. இங்கிலாந்து போன்ற கண்டிஷனில் நீங்கள் ரன்களை குவிக்கும்போது உங்களுக்கு நம்பிக்கை அளிக்கும். ” எனக் கூறியுள்ளார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Ramprasath H
  First published: