ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக களமிறங்கும் 11 இந்திய வீரர்கள் அறிவிப்பு... அதிரடி மாற்றங்கள்

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக களமிறங்கும் 11 இந்திய வீரர்கள் அறிவிப்பு... அதிரடி மாற்றங்கள்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ள இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நாளை விசாகாப்பட்டினம் மைதானத்தில் நடைபெற உள்ளது. கேப்டன் விராட் கோலிக்கு தலைமையிலான 11 வீரர்கள் கொண்ட அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.

இந்த அணியில் ரோஹித் சர்மா, அஸ்வின், விக்கெட் கீப்பர் விரதமான் சாஹா ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த டெஸ்ட் தொடரில் சொதப்பிய கே.எல். ராகுல் நீக்கப்பட்டுள்ளார். அதே சமயம் தமிழக வீரர் முரளி விஜயும் அணியில் இல்லை. விக்கெட் கீப்பிங்கில் வாய்ப்பு அளிக்கப்பட்டு வந்த இளம் வீரர் ரிஷப் பந்த் நீக்கப்பட்டு சஹா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி  : விராட் கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), ரோஹித் சர்மா, புஜாரா, விஹாரி, மயங்க் அகர்வால், ரவிசந்திரன் அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, விரதமான் சாஹா (விக்கெட் கீப்பர்), இசாந்த் சர்மா, முஹமது ஷமி

First published:

Tags: India vs South Africa 2019