இந்திய அணி பேட்டிங்... அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பட்டியல்

முதல் டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

news18
Updated: August 4, 2019, 7:55 PM IST
இந்திய அணி பேட்டிங்... அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பட்டியல்
இந்திய அணி
news18
Updated: August 4, 2019, 7:55 PM IST
வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான 2-வது டி 20 போட்டியில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது இந்திய அணி.

இந்திய அணி மேற்கு இந்திய தீவுகள் அணியுடன் மூன்று டி20 போட்டிகள், மூன்று ஒரு நாள் போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மோதவுள்ளது. முதல் டி 20 போட்டி அமெரிக்காவின் புளோரிடோ மாகாணத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

இந்நிலையில் இரண்டாவது டி 20 போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்தப் போடியில் வெற்றி பெற்று கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நினைப்பில் இந்திய அணி தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதேபோல் மேற்கிந்திய அணியும் போட்டியை வெல்ல வேண்டும் என்ற நினைப்பில் இருப்பதால் இன்றைய போட்டி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கப் போகிறது.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இந்திய அணி - ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, ரிஷப் பண்ட், மனிஷ் பாண்டே, க்ருணால் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமாஎ, நவ்தீப் சைனி, கலீல் அகமது.

வெஸ்ட் இண்டிஸ் - எவின் லெவிஸ், நிகோலஸ் பூரன், கிரன் பொல்லார்ட், சிம்ரான் ஹெட்மயர், ரோவ்மன் பவல், கர்லோஸ் ப்ராத்வைட், கீமோ பால், ஷெல்டன் காட்ரல், ஓஷேன் தாமஸ், காரி பியர், சுனில் நரைன்.
First published: August 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...