முகப்பு /செய்தி /விளையாட்டு / ரோஹித் சர்மா, விராட் கோலி அதிரடி: தொடரை வென்றது இந்திய அணி

ரோஹித் சர்மா, விராட் கோலி அதிரடி: தொடரை வென்றது இந்திய அணி

கோலி ரோஹித்

கோலி ரோஹித்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது இந்திய அணி.

கர்நாடக மாநிலம் பெங்களூருவிலுள்ள சின்னசாமி மைதானத்தில் இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. டாஸ்வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் குவித்தது.

அதனைத் தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக, ரோஹித் சர்மா, லோகேஷ் ராகுல் களமிறங்கினர். ராகுல் 19 ரன் எடுத்திருந்த நிலையில், அஸ்டான் அகர் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். அதனையடுத்து, ஜோடி சேர்ந்த ரோஹித் சர்மா, விராட் கோலி இணை ஆஸ்திரேலிய வீரர்களின் பந்துவீச்சைத் துவம்சம் செய்தனர். அதிரடியாக ஆடிய ரோஹித் சதத்தைக் கடந்தார். தொடரந்த ரோஹித், ஆறு சிக்சர் 8 பவுண்டரிகளுடன் 128 பந்துகளில் 119 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா அடம் சாம்பா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.

பின்னர், கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடியும் அதிரடியாக ரன்களைக் குவித்தது. நிதானமாக ஆடிய கோலியும் அரைசதத்தைக் கடந்தார். வெற்றி இலக்கை நெருங்கிய நிலையில், 89 ரன்கள் எடுத்திருந்தபோது கோலி ஆட்டமிழந்தார். இந்திய அணி 47.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்து வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் 2-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை வென்றது.

Also see:

First published:

Tags: India Cricket