மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரானப் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெற்றது. டாஸ்வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்செய்த மேற்கிந்திய தீவுகள் அணி ஐம்பது ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் எடுத்தனர்.
அதனையடுத்து, இந்திய அணியின் சார்பில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா, லோகேஷ் ராகுல் இணை நிதானமாக ஆடி ரன்களைக் குவித்தனர். இருவரும் அரை சதம் கடந்து அசத்தினர். 63 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஹோல்டர் பந்துவீச்சில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். அதனையடுத்து விராத் கோலி களமிறங்கினார்.
பின்னர், 77 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ராகுலும் ஆட்டமிழந்தார். கோலி அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தார். அவர், 81 பந்துகளில் 85 ரன்கள் குவித்தார். ரவிந்திரே ஜேடேஜாவும் அவர் பங்குக்கு 39 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 48.4 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 316 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதன் மூலம் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.