இலங்கை கிரிக்கெட் அணி மூன்று டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. நேற்று இரு தினங்களில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி சிறப்பான வெற்றி பெற்றது. இந்தநிலையில், இன்று இமாச்சலப் பிரதேசம் தரம்சாலாவிலுள்ள மைதானத்தில் மூன்றாவது டி20 போட்டி நடைபெற்றது.
டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். கேப்டன் சனகா மட்டும் அதிரடியாக ஆடி 78 ரன்கள் குவித்தார். இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன், ரோஹித் சர்மா களமிறங்கினர். ரோஹித் 5 ரன்களிலும், சஞ்சு சாம்சன் 18 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
தோனி, கோலி நிகழ்த்த முடியா உலக சாதனையை சாதித்த ரோஹித் சர்மா
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக ஆடினார். மறுபுறம் களமிறங்கிய தீபக் ஹூடா 21 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் அதிரடியாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர், 45 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இந்திய அணி 16.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், இந்திய அணி 3 போட்டிகள் தொடரில் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.