Home /News /sports /

Video: ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்த ரோஹித் சர்மா

Video: ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்த ரோஹித் சர்மா

  • News18
  • Last Updated :
    வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் கேப்டன் ரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட தொடரை ஒன்றுக்கு ஒன்று என சமன் செய்துள்ளது.

    இந்தியா - வங்கதேசம் இடையேயான இரண்டாவது டி 20 போட்டி ராஜ்கோட்டில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.
    தொடக்க ஆட்டக்காரர்களான லிடன் தாஸ் - முகமது நைம் இணை ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர். 6-வது ஓவரை சாஹல் வீசியபோது லிடன் தாசை ஸ்டம்ப் இட் செய்த ரிஷப் பன்ட் பந்தை ஸ்டம்பிற்கு முன்பே பிடித்து அவுட் செய்ததால் அந்த பந்து நோபாலாக அறிவிக்கப்பட்டது. இதனால் லிடன் தாஸ் தப்பினார்.

    முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 60 ரன்கள் குவித்தது. லிடன் தாஸ் 29 ரன்களுக்கும் நைம் 36 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அதற்கு பின் வந்த வீரர்கள் திணறினர். சர்காரும், கேப்டன் மெக்முதுல்லாவும் மட்டுமே ஓரளவு நிலைத்து நின்று விளையாடினர்.இருவரும் தலா 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் சேர்த்தது. இந்திய தரப்பில் சாஹல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    154 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்டனர். ரோகித் ஷர்மா ஆரம்பம் முதலே வாணவேடிக்கை நிகழ்த்தத் தொடங்கியதால் ரன் மளமளவென உயர ஆரம்பித்தது.

    10-வது ஓவரில் ஹேசைன் பந்துவீச்சில் தொடர்ந்து 3 சிக்சர்களை பறக்கவிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் ரோஹித் சர்மா. இதையடுத்து ஷிகர் தவான் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனாலும் அதிரடியைத் தொடர்ந்த ரோகித் சர்மா 43 பந்துகளில் 85 ரன்களைக் குவித்து விக்கெட்டை பறிகொடுத்தார். அதில் 6 சிக்சர்களும், 6 பவுண்டரிகளும் அடங்கும்.



    அதற்கு பின் களமிறங்கிய லோகேஷ் ராகுலும், ஸ்ரேயாஸ் அய்யரும் எளிதாக இந்திய அணியை வெற்றி பெற வைத்தனர். 26 பந்துகள் மீதமிருந்த நிலையில் இந்திய அணி இலக்கை எட்டியது.

    ரோகித் ஷர்மா ஆட்ட நாயகனாக தேர்வானார். இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில் கடைசி டி-20 போட்டி நாளை மறுநாள் நாக்பூரில் நடைபெற உள்ளது.



     
    Published by:Prabhu Venkat
    First published:

    Tags: Rohit sharma

    அடுத்த செய்தி