• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஓவலில் சுருண்டது இங்கிலாந்து... இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

ஓவலில் சுருண்டது இங்கிலாந்து... இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

India vs England

India vs England

ஓவல் டெஸ்டில் இங்கிலாந்து அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்து தோல்வி அடைந்தது.

  • Share this:
    இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதனாத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பந்து வீச்சை தேர்வு செய்தார். முதன் இன்னிங்சில் இந்திய அணியின் பேட்டிங் சொதப்பல் காரணமாக 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 290 ரன்கள் எடுத்து இந்திய அணியை விட 99 ரன்கள் முன்னிலை பெற்றது.

    முதல் இன்னிங்சில் இந்திய அணி வீரர்கள் தடுமாறிய நிலையில் இரண்டாவது இன்னிங்சில் தொடக்கம் நிதானமாக இருந்தது. கே.எல்.ராகுல் 46, புஜாரா 61, விராட் கோலி 44 ரன்களில் அவுட்டாகினர். மற்றொரு தொடக்க வீரரான ரோஹித் சர்மா பொறுப்புடன் விளையாடி வெளிநாட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 127 ரன்கள் அடித்த ரோஹித் சர்மா ராபின்சன் பந்தில் அவுட்டாகி வெளியேறினார்.

    விக்கெட் கீப்பர் பந்த் மற்றும் சர்துல் தாகூர் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்ததனர். இந்திய அணி 2-வது இன்னிங்சில் 466 ரன்கள் குவித்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 368 ரன்கள் இலக்காக நிர்ணயக்கப்பட்டது.

    இதையடுத்து தொடரின் கடைசி நாளான இன்று போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இங்கிலாந்து தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு அழுத்தம் கொடுத்தனர். இங்கிலாந்து 100 ரன்கள் எடுத்திருந்த போது முதல் விக்கெட்டை இழந்தது. ரோரி பர்ன்ஸ் 50 ரன்னில் தாகூர் பந்துவீச்சில் வெளியேறினார். இதையடுத்து இங்கிலாந்து அணியின் விக்கெட்கள் அடுத்தடுத்து விழ தொடங்கியது.

    டேவிட் மலன் 5 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார். சிறப்பாக விளையாடிய ஹசிப் அமீத் 63 ரன்னில் ஜடேஜா பந்துவீச்சில் அவுட்டானார். இதையடுத்து ஓலி போப் 2 ரன்னிலும், பேரிஸ்டோவ் மற்றும் மொயின் அலி ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினர். இங்கிலாந்து அணிக்கு பெரும் நம்பிக்கையாக இருந்த கேப்டன் ஜோ ரூட் 36 ரன்களில் தாகூர் பந்துவீச்சில் அவுட்டாகினர். மற்ற இங்கிலாந்து வீரர்களும் இந்திய பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் திணறினர். இறுதியாக இங்கிலாந்து அணி 210 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வி அடைந்தது. இதையடுத்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என முன்னிலையில் உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: