முகப்பு /செய்தி /விளையாட்டு / விராட் கோலி சூர்ய குமார் யாதவ் அரைசதம் , ஹாங்காங் அணிக்கு எதிராக இந்திய அணி வெற்றி

விராட் கோலி சூர்ய குமார் யாதவ் அரைசதம் , ஹாங்காங் அணிக்கு எதிராக இந்திய அணி வெற்றி

அரை சதம் அடித்த சூர்ய குமார் யாதவ் - விராட் கோலி

அரை சதம் அடித்த சூர்ய குமார் யாதவ் - விராட் கோலி

இந்த அரைசதத்தின் மூலம் டி20களில் 31 அரை சதங்கள் அடித்து அதிக அரைசதம் அடித்த வீரர்களில் ரோஹித் ஷர்மாவை சமன் செய்தார் விராட் கோலி.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆசிய கோப்பையின் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி ஹாங்காங் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற ஹாங்காங் முதலில் பவுளிங் செய்ய தேர்வு செய்தது. பாகிஸ்தானுடன் சிறப்பாக விளையாடிய ஹர்திக் பாண்டியாவிற்கு இந்த போட்டியில் ஓய்வளிக்கப்பட்டு ரிஷப் பண்டிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

முதலில் களம் இறங்கிய ரோஹித் ஷர்மா 21 ரன்களிலும், கே.எல்.ராகுல் 36 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் விராட் கோலியும், சூர்ய குமார் யாதவும் ஜோடி சேர்ந்தனர். விராட் கோலி அணியின் ஸ்கோரை பொறுமையாக உயர்த்த, சூர்ய குமார் பந்தை அனைத்து திசைகளிலும் விளாசினார். 22 பந்துகளில் அரைசதமடித்தார்.

கடைசி ஓவரில் மட்டும் சூர்ய குமார் யாதவ் 4 சிக்ஸர்கள் அடித்து அந்த ஒரு ஓவரில் மட்டும் 26 ரன்களை சேர்த்தார். இந்நிலையில் ஹாங்காங் அணி வெற்றி பெற 193 ரன்களை இலக்காக நிர்ணயத்தது இந்திய அணி.

இந்த அரைசதத்தின் மூலம் டி20களில் 31 அரை சதங்கள் அடித்து அதிக அரைசதம் அடித்த வீரர்களில் ரோஹித் ஷர்மாவை சமன் செய்தார் விராட் கோலி.

இதற்கு பிறகு ஹாங்காங் அணியின் கேப்டன் நிஜாகத் கானும், யாசிம் முர்தாசாவும் களம் இறங்கினர். இருவரும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப, பாபர் ஹயாத் மட்டும் நல்ல முயற்சியை கொடுத்தார். இருந்தாலும் ஹாங்காங் பேட்ஸ்மேன் அனைவரும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை எடுக்க, 20 ஓவெர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து, 152 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆவேஷ் கான் மட்டும் சற்று ரன்களை அதிகமாக விட்டுகொடுத்தார்.

top videos
    First published:

    Tags: Asia cup, Indian cricket team, Virat Kohli