முகப்பு /செய்தி /விளையாட்டு / தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்று இந்தியா அசத்தல்

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்று இந்தியா அசத்தல்

ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்தியா

ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்தியா

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவில் சுற்றுபயணம் செய்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி மூன்று போட்டி கொண்ட டி20 மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ள நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

Image
டேவிட் மில்லர் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் சுந்தர்

இதையடுத்து முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி இந்திய அணியின் துல்லியமான பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. கலிசன் மட்டும் நிதனமாக விளையாடி 34 ரன்கள் எடுத்த நிலையில் மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 27.1ஓவர்களில் அனைத்து விக்கெட்டைகளையும் இழந்து 99ரன்களை மட்டுமே எடுத்தது.

Also Read:பிசிசிஐ-க்கு புதிய தலைவர்? அடுத்த முக்கிய பொறுப்புக்கு நகரும் கங்குலி

இந்திய அணி தரப்பில் சுழல்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 4.1 ஓவர்களை வீசி 18 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் வாஷிங்க்டன் சுந்தர் ,முகமது சிராஜ் ,சபஷ் அமகது தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Image
4 விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப் யாதவ்

இதனையடுத்து 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் கேப்டன் ஷிகர் தவான் 8 ரன்களின் ரன் ஆவுட் ஆனார். அடுத்த வந்த இஷான் கிஷனும் 10 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் நிதானமாக ஆடி 49 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி  இறுதியில்  3விக்கெட்டை இழந்து  19.1ஓவர்களில் 105 ரன்களை எடுத்து  7விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

top videos

    ஸ்ரேயஷ் ஐயர் 28 ரன்களுடனும், சஞ்சு சாம்சன் 2 ரன்களுடன்  களத்தில் இருந்தனர். இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி கோப்பையை வென்றது.

    First published:

    Tags: Delhi, India vs South Africa