ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

வேகத்தில் மிரட்டிய இந்தியா.. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அபார வெற்றி - கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ் அசத்தல்

வேகத்தில் மிரட்டிய இந்தியா.. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அபார வெற்றி - கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ் அசத்தல்

விக்கெட் வீழ்த்திய கொண்டாடத்தில் இந்திய வீரர்கள்

விக்கெட் வீழ்த்திய கொண்டாடத்தில் இந்திய வீரர்கள்

திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச மைதானத்தில் இந்திய அணி அபாரமாக பந்துவீசி தென் ஆப்பிரிக்க அணியை திணறடித்தனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Thiruvananthapuram [Trivandrum], India

  தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

  இந்தியாவில் சுற்றுபயணம் செய்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி 3 டி20 மற்றும் 3ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச மைதானத்தில் நேற்று இரவு 7 நடைபெற்றது.

  இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, இந்திய வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தது.

  இதையும் படிங்க: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்... அகவிலைப்படி உயர்த்தி அறிவிப்பு - எவ்வளவு தெரியுமா?

  9 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி கேசவ் மகராஜ் எடுத்த 41 ரன்களால் 100 ரன்களை கடந்தது. அந்த அணி இருபது ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் சேர்த்தது.இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெடையும், தீபக் சகர் மற்றும் ஹர்ஷல் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். குறிப்பாக சுழல்பந்து வீச்சாளர் அஸ்வின் 4 ஓவர்களை வீசி அதில் ஒரு ஓவரை மெய்டன் செய்து வெறும் 8 ரன்களை மட்டுமே விட்டுகொடுத்தார்.

  107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த விராட் கோலியும் 3 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின்னர் கே.எல்.ராகுல், சூரியகுமார் யாதவ் இருவரும், கடைசி வரை நிதானமாக விளையாடி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இறுதியில் இந்திய அணி 16.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழக்காமல் 50 ரன்களும், கே.எல்.ராகுல் 51 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி கவுகாத்தியில் வரும் 2ஆம் தேதி நடைபெறவுள்ளது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: BCCI, India vs South Africa, India Win the Toss, T20