இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் 2-வது போட்டி ரஞ்சி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். முகமது சிராஜ்க்கு பதிலாக ஹர்சல் படேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி பந்துவீச்சை தொடங்கியது.
நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக குப்தில் மற்றும் மிட்சல் களமிறங்கினார்கள். இந்த ஜோடி சிறப்பான அடிதளத்தை அமைத்தது. குப்தில் 15 பந்துகளில் 31 விளாசிய நிலையில் தீபக் சாஹர் பந்துவீச்சில் அவுட்டானார். நியூசிலாந்து ஆரம்பத்தில் அதிரடியாக ஆடினாலும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சில் தடுமாறியது.
அஸ்வின், அக்ஷர் படேல், ஹர்சல் படேல் என மூவரும் நியூசிலாந்து ரன்ரேட்டை கட்டுபடுத்தினார். இதனால் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் ஹர்சல் படேல் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதையடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. கே.எல்.ராகுல் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா பவுண்டரி, சிக்ஸர்களாக விளாசினர். இந்திய அணி தனது முதல் விக்கெட்டை 117 ரன்னில் இழந்தது. கே.எல்.ராகுல் 65 ரன்களிலும், கேப்டன் ரோஹித் சர்மா 55 ரன்களிலும் அவுட்டாகினார்.
இந்திய அணியின் அதிரடியான ஓபனிங்கால் 17.2 ஒவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து இலக்கை எட்டியது. இந்த வெற்றியின் மூலம் 2-0 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது.
Published by:Vijay R
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.