ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்த இந்திய அணி!!..

கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்த இந்திய அணி!!..

வெற்றி பெற்ற கொண்டாடத்தில் ரோகித் மற்றும் கார்த்திக்

வெற்றி பெற்ற கொண்டாடத்தில் ரோகித் மற்றும் கார்த்திக்

7.2 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 92 ரன் குவித்த இந்திய அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Nagpur, India

  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் கேப்டன் ரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.

  இந்தியாவில் சுற்றுப்பயணம் வந்துள்ள ஆஸ்திரேலியா அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. மொகாலியில் நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வென்ற நிலையில் இரு அணிகளுக்கும் இடையே 2-வது டி20 போட்டி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்று நடைபெற்றது.  கனமழை காரணமாக ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் போட்டி நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது. இறுதியாக 8 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டது. இதை தொடர்ந்து டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

  இதையும் படிங்க: பெரிய போட்டிகளில் நாம் சிறப்பாக ஆடுவதில்லை : கங்குலி கவலை

  அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 8 ஓவர்கள் முடிவில் 90 ரன்களை எடுத்தது. கேப்டன் ஆரன் பிஞ்ச் 31 ரன் அடித்தார். அதிகபட்சமாக மேத்யூ வாட் 43 ரன் குவித்து களத்தில் இருந்தார். இந்தியா அணி தரப்பில் அக்சர் பட்டேல் 2 விக்கெட்களையும், பும்ரா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். பின்னர் 91 ரன் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணியில் கே.எல்.ராகுல் 10 ரன்னுக்கு வெளியேறினார். சிறப்பாக விளைடியாக கேப்டன் ரோகித் சர்மா 4சிக்ஸர்கள், 4 பவுண்டிரிகள் அடித்து 46 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். விராட் கோலி 11 ரன்னும், பாண்டியா 9 ரன்னும் எடுத்தனர்.

  Image
  பந்தைம் சிக்சருக்கு பறக்கவிடும் கேப்டன் ரோகித் சர்மா

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கடைசி ஓவரில் 9 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நெருக்கடியில் இருந்த இந்திய அணி சாம்ஸ் வீசிய முதல் பந்திலே சிக்ஸரை பறக்கவிட்ட தினேஷ் கார்த்திக் அடுத்த பந்தை பவுண்டரிக்கு அனுப்பி வைத்து அணிக்கு வெற்றியை தேடி தந்தார் .தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 10 ரன் அடித்தார். 7.2 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 92 ரன் குவித்த இந்திய அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடர் 1-1 என்ற சமன் நிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையேன மூன்றாவது டி20 போட்டி நாளை ஐதரபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதனாத்தில் நடைபெறவுள்ளது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: BCCI, India, India captain Rohit Sharma, India vs Australia, Nagpur, T20