IND vs AUS | டி20 தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலியாவிற்கு பதிலடி கொடுத்தது இந்திய அணி

IND vs AUS | டி20 தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலியாவிற்கு பதிலடி கொடுத்தது இந்திய அணி

IND vs AUS

India vs Australia | கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஹர்திக பாண்டியா 2 சிக்ஸர்கள் விளாசி அணியை வெற்றியடைய செய்தார்.

  • Share this:
    ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2-வது டி20 போட்டியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை இந்திய அணி கைப்பற்றியது. ஒரு நாள் தொடரை வென்ற ஆஸ்திரேலியாவிற்கு டி20 தொடரை வென்று இந்திய அணி பதிலடி கொடுத்துள்ளது.

    ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது. அதை தொடர்ந்து டி20 தொடரில் முதல் போட்டியை 11 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    சிட்னி மைதானத்தில் இன்று தொடங்கிய 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஃபின்ச் காயம் காரணமாக இன்றையப் போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக மேத்யூவ் வேட் கேப்டன் பொறுப்பை ஏற்றார்.

    இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி அதிரடியாக விளைாயாடி ரன்குவிப்பில் ஈடுபட்டது. தொடக்க வீரராக இறங்கிய கேப்டன் மேத்யூவ் வேட் 32 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஸ்மித் 46 ரன்கள் எடுத்தார். இறுதியாக ஆஸ்திரேலியா 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்தது.

    ஆஸ்திரேலியாவின் அதிரடி தமிழக வீரர் நடராஜன் பந்துவீச்சில் எடுபடவில்லை. இந்த போட்டியிலும் சிறப்பாக பந்துவீசிய நடராஜன் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

    இதையடுத்து 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பான அடித்தளமிட்டனர். இந்திய அணி 56 ரன்கள் எடுத்திருந்த போது தனது முதல் விக்கெட்டை இழந்தது. கே.எல்.ராகுல் 30 ரன்னிலும், அவரை தொடர்ந்து வந்த கேப்டன் விராட் கோலி 40 ரன்னிலும் அவுட்டாகினர்.

    மற்றொரு தொடக்க வீரர் தவான் சிறப்பாக விளைாயடி 52 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதி ஓவர்களில் போட்டி பரபரப்பின் உச்சத்திற்கே சென்றது. கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஹர்திக பாண்டியா 2 சிக்ஸர்கள் விளாசி அணியை வெற்றியடைய செய்தார். ஹர்திக் பாண்டியா 22 பந்துகளில் 42 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி தொடரை வென்று சாதித்துள்ளது. இந்த இரு அணிகளுக்கும் இடையேயான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி டிசம்பர் 8-ம் தேதி நடைபெற உள்ளது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vijay R
    First published: