ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

Ind vs WI | பிரசித் கிருஷ்ணா அபார பந்துவீச்சு... மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா

Ind vs WI | பிரசித் கிருஷ்ணா அபார பந்துவீச்சு... மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா

Ind vs WI

Ind vs WI

Ind vs WI | மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியை ரன்களில் வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 2-வது ஒரு நாள் போட்டி இன்று நடைபெற்றது.

  இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். ரோஹித் சர்மா 5, பந்த் மற்றும் விராட் கோலி தலா 18 ரன்களில் அவுட்டாகினர். இதனால் ரன் எடுக்க இந்திய அணி தடுமாறியது.

  கே.எல்.ராகுலும், சூர்யகுமார் யாதவும் பொறுப்புடன் விளையாடி இந்திய அணியை தடுமாற்றத்தில் இருந்து மீட்டனர். கே.எல்.ராகுல் 49 ரன்னில் தேவையில்லாமல் 2வது ரன் எடுக்க முயன்ற போது ரன்அவுட்டானார். நிதானமாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 64 ரன்கள் சேர்த்து அவுட்டானார். இந்திய அணி இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் சேர்த்தது.

  இதையடுத்து 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. இளம்பந்து வீச்சார்ள் ப்ரிஷித் கிருஷ்ணா அபாரமாக பந்துவீசி அடுத்தடுத்து விக்கெட்களை வீழ்த்தினார். இந்திய அணியின் மற்ற பந்துவீச்சாளர்களும் பந்துவீசியதால் 46 ஓவர்களில் மேற்கிந்திய அணி 193 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

  இந்திய அணி சார்பில் பிரஷித் கிருஷ்ணா 4 விக்கெட்களையும் சர்துல் தாகூர் 2 விக்கெட்களையும் வீழ்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

  Published by:Vijay R
  First published:

  Tags: Cricket, Ind vs WI, India vs west indies