ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இந்திய பந்துவீச்சில் சுருண்டது இலங்கை... தொடரை வென்று கோப்பையை கைப்பற்றினார் ரோஹித்

இந்திய பந்துவீச்சில் சுருண்டது இலங்கை... தொடரை வென்று கோப்பையை கைப்பற்றினார் ரோஹித்

Ind vs SL

Ind vs SL

India vs Sri Lanka | இலங்கை அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்தியா தொடரை வென்று கோப்பையை கைப்பற்றியது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி பெங்களூரு மைதானத்தில் பகலிரவு போட்டியாக மார்ச் 12-ம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஷ்ரேயாஸ் ஐயரின் (92 ரன்கள்) சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 252 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணிக்கு பும்ரா கடும் நெருக்கடியை கொடுத்தார். பும்ராவின் வேகத்தை எதிர்கொள்ள முடியாமல் இலங்கை அணி 109 ரன்களுக்கு சுருண்டது. பும்ரா 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். 143 ரன்கள் முன்னிலை உடன் 2-வது இன்னிங்சை இந்திய அணி தொடங்கியது.

2-வது இன்னிங்சிலும் ஸ்ரோயஸ் ஐயர் சிறப்பாக விளையாடி 67 ரன்களும் ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி 50 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி 303 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்து இருந்த போது டிக்ளர் செய்தது.

447 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இறங்கிய இலங்கை அணி 3-வது நாளிலேயே 208 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை கேப்டன் கருணரத்னே மட்டும் பொறுப்புடன் விளையாடி சதமடித்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இந்திய அணி சார்பில் அஸ்வின் 4, பும்ரா 3, அக்ஷர் படேல் 2 மற்றும் ரவிந்திரா ஜடேஜா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 2 டெஸ்ட் போட்டிகளையும் வென்ற இந்திய அணி தொடரை வென்று கோப்பையை கைப்பற்றியது.

First published:

Tags: India vs srilanka