INDvSL | இந்திய அணி அபார வெற்றி பெற்று முதலிடத்திற்கு முன்னேறியது!

ICC World Cup 2019 | India vs Srilanka | இந்திய அணியின் தொடக்க ஜோடியை அவுட்டாக்க முடியாமல் இலங்கை அணி பந்துவீச்சாளர்கள் திணறி வந்தனர்.

INDvSL |  இந்திய அணி அபார வெற்றி பெற்று முதலிடத்திற்கு முன்னேறியது!
INDvSL
  • News18
  • Last Updated: July 6, 2019, 10:32 PM IST
  • Share this:
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுலின் அபார சதத்தால் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

உலகக் கோப்பை தொடரின் 44-வது லீக் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக கருணரத்னே, பெரேரா களமிறங்கினார். கேப்டன் கருணரத்னே 10 ரன்களில் அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.


அதை தொடர்ந்து பெரேரா 10, பெர்னாண்டோ 20, மென்டிஸ் 3 ரன்களில் அவுட்டாக இலங்கை அணி 55 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து திணறி வந்தது.

இலங்கை அணி தடுமாற்றத்தில் இருந்த போது மேத்யூஸ், திரிமன்னே ஜோடி சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் நிதனமாக ஆடி ரன்விகிதத்தை சீராக உயர்த்தினர். திரிமன்னே 68 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அவுட்டானார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய  மேத்யூஸ் 10 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 113 ரன்கள் விளாசினார்.



மேத்யூஸின் அதிரடியான சதத்தால் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா அதிகபட்சமாக 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

இந்திய அணி 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் இலங்கை அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர்.

தொடக்க ஜோடியை அவுட்டாக்க முடியாமல் இலங்கை அணி பந்துவீச்சாளர்கள் திணறி வந்தனர். அபாராமாக ஆடிய ரோஹித் நடப்பு உலகக் கோப்பையில் 5-வது சதத்தை பதிவு செய்தார்.

இதன் மூலம் உலகக் கோப்பை ஒரு தொடரில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை அவர் படைத்துள்ளார். ரோஹித் சர்மாவிற்கு இணையாக கே.எல்.ராகுலும் அதிரடியாக ஆடி சதம் அடித்தார். ரோஹித் 103 ரன்னிலும், கே.எல்.ராகுல் 111 ரன்னிலும் அவுட்டாகினர்.

தொடக்க வீரர்கள் இருவரும் சதம் அடித்ததால் இந்திய அணி எளிதாக இலக்கை எட்டியது. இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

உலகக் கோப்பை தொடரின் இன்று நடைபெறும் கடைசி லீக் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றால் மீண்டும் அந்த அணி முதலிடத்தை பிடிக்கும்.
First published: July 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்