இந்தியா - வங்கதேச அணிகள் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றன. சிட்டோக்ரமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனால் வங்கதேசத்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக 2-0 என இந்தியா வென்றது.
இதனையடுத்து தொடரை சமன் செய்யும் முனைப்பில் மிர்பூரில் நடைபெற்ற 2வது டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு எதிராக களமிறங்கிய வங்கதேச அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
வங்கதேச அணி முதல் இன்னிங்கிஸில் 227 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அடுத்து விளையாடி இந்திய அணி 314 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
மூன்றாவது நாளான நேற்று 70.2 ஓவர்களில் 231 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜாகீர் ஹாஸன் 50 ரன்களும் லிட்டன் தாஸ் 73 ரன்களும் எடுத்திருந்தனர். இந்தியா சார்பில் அக்ஸர் படேல் 3 விக்கெட்டுகளும் அஸ்வின் மற்றும் சிராஜ் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
புத்தாண்டு ஷாப்பிங் ஹாப்பியா! மீண்டும் ட்ரெண்டிங்கில் காவ்யா மாறன்
இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணியினால் வங்கதேச அணியின் விக்கெட்டுகளை சமாளிக்க முடியாமல் திணறினர். இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களான புஜாரா 6 ரன்களும், விராட் கோலி 1 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். கேப்டன் கே.எல்.ராகுலும் வெறும் 2 ரன்களுக்கு ஷகிப் அல் ஹசனின் பந்துவீச்சில் வெளியேறினார்.
நேற்றைய ஆட்டநேர முடிவில் 45 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. இந்த நிலையில் வெற்றிபெற 100 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் 4வது நாள் ஆட்டத்தை துவங்கியது இந்திய அணி.
ரவிச்சந்திரன் அஸ்வினும் அக்சர் படேலும் பொறுப்பாக ஆடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டு வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தினர். இறுதியில் 145 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது. அஸ்வின் 42, அக்சர் படேல் 34 ரன்களும் எடுத்து வெற்றிக்கு பக்கபலமாக இருந்தனர். 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 தொடரையும் வென்றது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bangladesh, Cricket, Virat Kohli