Ind vs Aus | ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா ஆறுதல் வெற்றி

Ind vs Aus | ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா ஆறுதல் வெற்றி

IND vs AUS

India vs Australia | ஹர்திக் பாண்டியா 92 மற்றும் ஜடேஜா 66 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தனர்.

  • Share this:
    ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. 3 ஒரு நாள் போட்டிகளள் கொண்ட இந்த தொடரில் ஆஸ்திரேலியா 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. ஆறுதல் வெற்றி பெறும் முனைப்புடன் இந்திய அணி ஆஸ்திரேலியாவை இன்று எதிர்கொண்டது.

    இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன், சுப்மன் கில், குல்தீப் யாதவ், சர்துல் தாகூர் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில், ஷிகார் தவான் களமறிங்கினர்.

    தவான் 13 ரன்னிலும், சுப்மன் கில் 33 ரன்னிலும், ஷ்ரோயஸ் ஐயர் மற்றும் கே.எல். ராகுல் முறையே 19, 5 ரன்களில் அவுட்டாகினர். கேப்டன் விராட் கோலி பொறுப்புடன் விளையாடி 63 ரன்கள் சேர்தார். இந்திய அணி 31 ஒவரில் 152 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

    அதிரடி வீரர் ஹர்டிக் பாண்டியா மற்றும் ஆல்ரவுண்டர் ஜடேஜா ஜோடி இந்திய அணியை தடுமாற்றத்திலிருந்து மீட்டனர். சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து இந்த ஜோடி விளையாடியதால் 50 ஓவர்கள் முடிவில் 302 ரன்கள் என்ற சிறப்பான நிலைக்கு இந்திய அணி வந்தது. ஹர்திக் பாண்டியா 92 மற்றும் ஜடேஜா 66 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தனர்.

    இதையடுத்து 303 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. தொடக்க வீரர் மார்னஸ் 7 ரன்கள் எடுத்திருந்த போது அவரை வீழ்த்தி சர்வசேத கிரிக்கெட்  அரங்கில் தனது முதல் விக்கெட் எடுத்தார் தமிழக வீரர் தங்கராசு நடராஜன். அடுத்த வந்த ஸ்டீவன் ஸ்மித் 7 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்த வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானாலும் கேப்டன் ஃபின்ச் இந்த போட்டியிலும் சிறப்பாக விளையாடி 75 ரன்கள் குவித்து அவுட்டாகினர். ஆஸ்திரேலியா அணியில் சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தாலும் பின்வரிசையில் இறங்கிய மேக்ஸ்வெல் தனது வழக்கமான அதிரடியான ஆட்டத்தால் 38 பந்துகளில் 59 ரன்கள் எடுத்திருந்த போது அவுட்டானார். இதனால் போட்டியின் வெற்றி வாய்ப்பு இந்திய அணிக்கு மீண்டும் திரும்பியது. இறுதியாக ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 289 ரன்கள் மட்டுமே எடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா ஒரு நாள் தொடரை வென்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் 4-ம் தேதி தொடங்க உள்ளது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vijay R
    First published: