ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

மகளிர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணியை 65 ரன்களில் சுருட்டியது இந்தியா...

மகளிர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணியை 65 ரன்களில் சுருட்டியது இந்தியா...

விக்கெட் வீத்திய கொண்டாட்டத்தில் இந்திய வீரங்கனைகள்

விக்கெட் வீத்திய கொண்டாட்டத்தில் இந்திய வீரங்கனைகள்

இந்திய மகளிர் அணி தரப்பில் ரேணுகா சிங் 3 ஓவர்களை வீசி ஒரு ஓவரை மெய்டன் செய்து 5 ரன்களை மட்டுமே விட்டுகொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • inter, Indiabangladesh

வங்கதேசத்தில் நடைபெற்றுவரும் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இலங்கை அணியை 65 ரன்களில் இந்திய அணி சுருட்டியது.

வங்கதேசத்தில் சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும்  ஆசிய மகளிர் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய மகளி மற்றும் இலங்கை மகளிர் அணிகள் பலப்பரீச்சை நடத்தினர். இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய இலங்கை அணி இந்திய அணியின் அபார பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் தொடர்ந்து விக்கெட்டை பறிகொடுத்தது. இலங்கை மகளிர் அணியில் ஒஷதி ரணசிங்கே மட்டுமே 13 ரன்கள் எடுத்து இரட்டை இலக்க ரன்களை கடந்த ஒரே வீரங்கனை ஆவர். தொடர்ந்து அபாரமாக பந்துவீசிய இந்திய அணி இலங்கையின் பேட்டிங்கை சரித்தது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 9விக்கெட்டுகளை இழந்து 65 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதையும் படிங்க: டி20 உலகக்கோப்பை : இந்திய அணி உடன் சென்ற ஒரே பெண் ஊழியர்... யார் இவர்?

இந்திய மகளிர் அணி தரப்பில் ரேணுகா சிங் 3 ஓவர்களை வீசி ஒரு ஓவரை மெய்டன் செய்து 5 ரன்களை மட்டுமே விட்டுகொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் ராஜேஸ்வரி கயக்வாட் மற்றும் ராணா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். 66 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி விளையாடி வருகிறது.

First published:

Tags: Asia Cup Final, Indian women cricket