இங்கிலாந்திடம் போராடித் தோற்ற இந்திய அணி.. டி-20 தொடரையும் இழந்த பரிதாபம்!

#IndiaWomen Lose 2nd #T20 International, England Win Series | இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 111 ரன்கள் மட்டுமே எடுத்தது.#INDWvENGW

news18
Updated: March 7, 2019, 4:35 PM IST
இங்கிலாந்திடம் போராடித் தோற்ற இந்திய அணி.. டி-20 தொடரையும் இழந்த பரிதாபம்!
இந்திய மகளிர் அணி தோல்வி. (ICC)
news18
Updated: March 7, 2019, 4:35 PM IST
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி-20 போட்டியில் கடைசி ஓவரில் இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்ததால் 0-2 என்ற கணக்கில் தொடரையும் இழந்தது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து மகளிர் அணி, 3 ஒரு நாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

முதலில் நடந்த ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய மகளிர் அணி வென்றது. 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் கவுகாத்தியில் நடந்த முதல் டி-20 ஆட்டத்தில் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இதனை அடுத்து, இரு அணிகள் மோதிய 2-வது டி-20 போட்டி இன்று (மார்ச் 7) நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது.

England Women, இங்கிலாந்து மகளிர் அணி
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இங்கிலாந்து மகளிர் அணி. (ICC)


இங்கிலாந்து அணியின் ஆக்ரோசமான பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இந்திய அணி வீராங்கனைகள் வந்த வேகத்தில் வெளியேறினர். அதிகபட்சமாக மிதாலி ராஜ் அடித்த 20 ரன்கள்தான். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 111 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனை அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி டேனியல் வயட்டின் அதிரடி அரை சதத்தால், அந்த அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

Danni Wyatt, டேனியல் வயட்
இங்கிலாந்து வீராங்கனை டேனியல் வயட் அதிரடி அரைசதம். (ICC)


இதன்மூலம், 5 விக்கெட்டுகளை வித்தியாசத்தில் தோல்வி அடைந்த இந்திய மகளிர் அணி, 0-2 என்ற கணக்கில் தொடரையும் இழந்தது.

VIDEO: வீரர்களை தனது விலையுயர்ந்த காரில் அழைத்துச் சென்ற தோனி!

கடைசி ஓவர் வீசுவதைவிட ஹிந்தி பேசுவதுதான் கடினம் - விஜய் சங்கர் ஓபன் டாக்!

Also Watch...

First published: March 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...