முகப்பு /செய்தி /விளையாட்டு / ஜிம்பாப்வே அணியை எளிதில் வீழ்த்தி தொடரை வென்றது இந்திய அணி!

ஜிம்பாப்வே அணியை எளிதில் வீழ்த்தி தொடரை வென்றது இந்திய அணி!

இந்திய அணி

இந்திய அணி

முதல் போட்டியில் ஷிகர் தவனும் ஷுப்மன் கில்லும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடினர். ஆனால் இந்த போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • inter, IndiaZimbaweZimbaweZimbaweZimbawe

ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஹராரேவில் நடந்த முதல் போட்டியை கைப்பற்றிய இந்திய அணி, இன்று இரண்டாவது போட்டியில் ஜிம்பாப்வே அணியுடன் மோதியது. டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்ற தீபக் சஹர் இந்த போட்டியில் விளையாடவில்லை.

முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி ஆரம்பம் முதலே ரன்கள் எடுக்க முடியாமல் தடுமாறியது.  ஜிம்பாப்வே அணி 38.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 161 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஜிம்பாப்வே சார்பில் அதிகபட்சமாக சேன் வில்லியம்ஸ் 42 ரன்களும், ரியான் பர்ல் 39 ரன்களும் எடுத்தனர். இந்தியாவின் ஷர்துல் தாக்குர் அதிகப்பட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Also Read : மனைவி தனாஸ்ரீ உடன் விவாகரத்தா? மௌனம் கலைத்த சஹால்

162 ரன்கள் எடுத்தால் வெற்றி என எளிய இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 5 விக்கெட் இழந்து 25.4 ஓவரில் இலக்கை எட்டியது. சஞ்சு சாம்சன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 43 ரன்களை எடுத்து ஆட்ட நாயகன் விருதையும் வென்றார். முதல் போட்டியில் ஷிகர் தவனும் ஷுப்மன் கில்லும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடினர். ஆனால் இந்த போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்தது.

முதல் இரண்டு போட்டிகளையும் வென்றதால், இந்தியா அணி தொடரை கைப்பற்றியது. மூன்றாவது போட்டி வரும் திங்களன்று நடைபெற இருக்கிறது.

First published:

Tags: Indian cricket team, ODI, Zimbabwe