ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

தென்னப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்று வரலாறு படைத்தது இந்தியா!!.

தென்னப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்று வரலாறு படைத்தது இந்தியா!!.

தொடரை வென்ற இந்தியா

தொடரை வென்ற இந்தியா

இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதன் மூலம் முதன் முறையாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றி இந்திய அணி வரலாறு படைத்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

  இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையேன 2வது டி20 போட்டி கவுகாத்தியில் தொடங்கியது.

  இதையும் படிங்க: மைதானத்திற்குள் திடீரென புகுந்த பாம்பு.. ஆடிப்போன வீரர்கள், நிறுத்தப்பட்ட மேட்ச்.. இந்திய - தெ.ஆப்பிரிக்கா போட்டியில் பரபரப்பு

  இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் தேம்ம பவுமா முதலில் பீல்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி தொடக்க வீரர்களாக களமிறங்கிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். 37 பந்துகளின் 43 ரன்களை எடுத்திருந்த கேப்டன் ரோகித் சர்மா மகாராஜ் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

  மறுமுனையில் அதிரடி காட்டிய கே.எல்.ராகுல் அதே மகாராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ராகுல் 28 பந்துகளில் 4 சிக்சர்,5 பவுண்டர்கள் விளாசி 57 ரன்களில் வெளியேறினார். அடுத்த விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை நான்கு புறமும் பறக்கவிட்டனர். தொடர்ந்து 360 கோணத்தில் பந்துகளை பறக்கவிட்ட சூர்யகுமார் யாதவ் 18 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார். 22 பந்துகளில் 5 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் விளாசி 66 ரன்களில் ரன் ஆவுட் ஆனார்.

  விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ்

  மறுமுனையில் சற்று நிதானமாக விளையாடி கொண்டிருந்த விராட் கோலி  பின்னர் அவரும் அதிரடி ஆட்டத்தை ஆடினார்.இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில்  3விக்கெட் இழப்பிற்கு 237 ரன்களை குவிந்தது. விராட் கோலி  28 பந்துகளில் 49 ரன்களும் , தினேஷ் கார்த்திக் 7 பந்துகளில் 17 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

  238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறினர். முதல் ஓவரை தீபர் சாஹார் மெய்டன் செய்தார். இதனையடுத்து இரண்டாவது ஓவரை வீசிய அர்ஷிதீப் சிங், ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டை வீழ்த்தினர்.

  இதனையடுத்து தொடக்க வீரர் டி காக் மற்றும் டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி இந்திய அணியை திணறிடித்தனர். இந்த ஜோடி  வெற்றிக்காக கடைசி வரை போராடியது. டேவிட் மில்லர் 46 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.

  சதம் அடித்த டேவிட் மில்லர்

  இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 3விக்கெட்டை இழந்து 221 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று  டி20 தொடரை கைப்பற்றியது. இதன் மூலம் முதன் முறையாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றி இந்திய அணி வரலாறு படைத்துள்ளது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: India captain Rohit Sharma, India vs South Africa, T20