ஆஸ்திரேலியாவை தெறிக்கவிட்ட இந்தியா: தகர்க்கப்பட்ட சாதனைகள் என்னென்ன?

ஆஸ்திரேலியாவை தெறிக்கவிட்ட இந்தியா: தகர்க்கப்பட்ட சாதனைகள் என்னென்ன?

ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்று சாதனை படைத்த இந்திய அணி. (BCCI)

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடர் மட்டுமல்லாமல் ஒரு நாள் தொடரையும் முதன்முறையாக அவர்களது மண்ணிலேயே வென்றது முக்கிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் முதன்முறையாக இந்தியா 2-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 230 ரன்களை இலக்காக இந்தியாவிற்கு அளித்தது. யுவேந்திர சாஹல் 42 ரன்கள் அளித்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து விளையாடத் தொடங்கிய இந்தியா 49-வது ஒவரின் இரண்டாவது பந்தில் பவுண்டரி அடித்ததன் மூலம் வரலாற்று வெற்றியை பெற்றது.

இதன்மூலம் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடர் மட்டுமல்லாமல் ஒரு நாள் தொடரையும் முதன்முறையாக அவர்களது மண்ணிலேயே வென்றது சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

தோனியின் சாதனைகள்


Dhoni, தோனி
மகேந்திர சிங் தோனி. (ICC)


மகேந்திர சிங் தோனி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் 1,000 ரன்களைக் கடந்துள்ளார். சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மா, விராட் கோலியை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் 1,000 ரன்களை அடித்த 4-வது வீரர் தோனி ஆவார்.

மேலும் இன்றைய கிரிக்கெட் போட்டியில் வெற்றிகரமாக 26,000 ரன்களை கடந்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் 1,500 ரன்களும், இலங்கைக்கு எதிரான போட்டியில் 2,383 ரன்களையும் தோனி எடுத்துள்ளார்.

இந்தத் தொடரின்போது நடைபெற்ற 3 போட்டிகளிலும் தனது அரைச் சதத்தை தோனி பதிவு செய்துள்ளார். ஒரு தொடரில் மூன்றாவது முறையாக 3 அரைச் சதங்களை அடித்துள்ளார். முன்பு 2011-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும், 2014-ல் நியூசிலாந்து எதிரான தொடரிலும் மூன்று அரைச் சதங்களைத் தோனி அடித்திருந்தார்.

முகமது ஷமி


முகமது ஷமி


வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இன்றைய போட்டியில் எடுத்த 2 விக்கெட்டுகளை வீழ்த்தி 250 என்ற இலக்கை அடைந்துள்ளார். டெஸ்ட் போட்டியில் 144 விக்கெட்டுகளும், ஒரு நாள் போட்டிகளில் 99 ரன்களும் முகமது ஷமி எடுத்துள்ளார்.

அகர்கர் சாதனையைச் சமன் செந்த யுவேந்திர சாஹல்
இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஒரு நாள் போட்டி ஒன்றில் 6 விக்கெட் வீழ்த்திய முதல் வீரராக அஜித் அகர்கர் இருந்து வந்தார். இன்று 42 ரன் அளித்து 6 விக்கெட்களை யுவேந்திர சாஹல் எடுத்து அந்தச் சாதனையைச் சமன் செய்துள்ளார். 28 வயதான யுவேந்திர சாஹலுக்கு தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இது மிக முக்கியப் போட்டியாக மாறியுள்ளது.

முதல் ஸ்பின்னர் யுவேந்திர சாஹல்


ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒரு கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் எடுத்த முதல் ஸ்பின் பந்துவீச்சாளர் என்ற பெயரையும் யுவேந்திர சாஹல் பெற்றுள்ளார். முன்பு ஆஸ்திரேலியா எதிரான ஒரு நாள் தொடரில் முரளி கார்த்திக் 27 ரன் அளித்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 6 விக்கெட் எடுத்த இரண்டாவது சுழல் பந்து வீச்சாளர் யுவேந்திர சாஹல்.

ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆகியுள்ளார் யுவேந்திர சாஹல். இதற்கு முன்பு இந்த சாதனையைச் செய்த ஒரே வீரர் இலங்கையைச் சேர்ந்த அஜந்தா மெண்டிஸ் ஆவார்.

பிற முக்கிய சாதனைகள்


India-Bhuvneshwar | இந்திய அணியினர்
இந்திய அணியினர்


1. புவனேஷ் குமார் ஃபிஞ்ச் விக்கெட்டை தொடர்ந்து மூன்று முறை எடுத்துள்ளார்.
2. ஆஸ்திரேலியாவின் மார்ஷ், கவாஜா இணை தொடர்ந்து மூன்று முறை 50 ரன்களை எடுத்துள்ளது.
3. ஜே ரிச்சர்ட்சன் தொடர்ந்து மூன்று முறை விராட் கோலி விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.

மேலும் பார்க்க: இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் ரிஷப் பன்ட்
Published by:Tamilarasu J
First published: