மறக்க முடியுமா இந்நாளை! ரசிகர்களின் 28 ஆண்டுகால ஏக்கத்தை தணித்த 'தல' தோனியின் சிக்ஸர்

2011 உலகக்கோப்பை இறுதி போட்டியில் தோனி சிக்ஸர் அடித்து ஆட்த்தை முடித்து வைப்பார். கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத இந்த வீடியோவை ஐசிசி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது.

Web Desk | news18
Updated: April 2, 2019, 4:39 PM IST
மறக்க முடியுமா இந்நாளை! ரசிகர்களின் 28 ஆண்டுகால ஏக்கத்தை தணித்த 'தல' தோனியின் சிக்ஸர்
தோனி - யுவராஜ்சிங்
Web Desk | news18
Updated: April 2, 2019, 4:39 PM IST
2011ம் ஆண்டு இதே நாளில் தான் உலகக்கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி வென்று சாதனை படைத்தது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மே 30ம் தேதி இங்கிலாந்தில் துவங்கவுள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் 45 லீக் போட்டிகள் 3 நாக் அவுட் போட்டி என மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

உலகக்கோப்பை தெடாரில் ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் முதல் 8 அணிகள் என்ற தரவரிசைப்படி தேர்வாகி உள்ளது.

மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதிச்சுற்று மூலமும் தேர்வு செய்யபட்டு உள்ளன. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் 2011ம் ஆண்டு இன்றைய நாளில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி மும்பையில் நடைப்பெற்றது. இந்தப் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி 28 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி உலகக்கோப்பையை ருசித்தது.

2011 உலகக்கோப்பை கிரிக்கெட் - வெற்றி கொண்டாட்டத்தில் இந்திய அணி


இந்த போட்டியில் தோனி சிக்ஸர் அடித்து ஆட்த்தை முடித்து வைப்பார். கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத இந்த வீடியோவை ஐசிசி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது.
Loading...8 ஆண்டுகள் கடந்தும் இன்றும் கிரிக்கெட் ரசிகர்கள் அந்த வீடியோவை ரசித்து வருகின்றனர். இந்த போட்டியில் கம்பீர் 97 ரன்களும், தோனி 91 ரன்கள் எடுத்து உலகக்கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தனர்.

விளையாட்டு
விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also Watchஐ.பி.எல் தகவல்கள்:

POINTS TABLE:


SCHEDULE TIME TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:
First published: April 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...