Home /News /sports /

சேப்பாக்கத்தில் இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் தீவிர பயிற்சி!

சேப்பாக்கத்தில் இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் தீவிர பயிற்சி!

சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. டி20 தெடாரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி வரும் 15ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க சென்னை வந்த இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.

சேப்பாக்கம் மைதானத்தில் 2017ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான சர்வதேச போட்டியில் இந்திய அணி பங்கேற்றது. 2 ஆண்டுகளுக்கு பின் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டி என்பதால் டிக்கெட்கள் முழுமையாக விற்று தீர்ந்துள்ளது.
Published by:Vijay R
First published:

Tags: Cricket, India vs west indies

அடுத்த செய்தி