ராணுவ தொப்பி விவகாரம்: பல்பு வாங்கிய பாகிஸ்தான்!

India was granted permission to wear #militarycaps: #ICC | ராஞ்சியில் நடந்த போட்டியில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய அணி வீரர்கள் ராணுவ தொப்பியை அணிந்து விளையாடினர். #INDvAUS

ராணுவ தொப்பி விவகாரம்: பல்பு வாங்கிய பாகிஸ்தான்!
ராணுவத் தொப்பியுடன் இந்திய அணி. (BCCI)
  • News18
  • Last Updated: March 11, 2019, 8:35 PM IST
  • Share this:
இந்திய கிரிக்கெட் அணி ராணுவ தொப்பியை அணிந்தது விளையாடிய விவகாரத்தில் பாகிஸ்தான் குற்றச்சாட்டை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 8-ம் தேதி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய அணி வீரர்கள் ராணுவ தொப்பியை அணிந்து விளையாடினர். அத்துடன், இந்திய வீரர்கள் ராஞ்சிப் போட்டிக்கான ஊதியத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குழந்தைகள் கல்விச் செலவுக்கு வழங்குவதாக தெரிவித்தனர்.

ராணுவ வீரர்களின் தொப்பியை அணிந்து விளையாடிய இந்திய அணி மீது ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் அந்நாட்டைச் சேர்ந்த சில அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கினர்.

ICC, PCB, BCCI
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் இசான் மனி. (Twitter/ICC)


இந்த விவகாரம் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது. அதில், “ராணுவ தொப்பியை பயன்படுத்துவது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் முன்கூட்டியே ஐசிசியிடம் அனுமதி கேட்டது. உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மற்றும் நலநிதி திரட்டும் முயற்சி என்பதால் அனுமதி அளிக்கப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், இந்திய அணி மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எழுப்பிய குற்றச்சாட்டு செல்லுபடியாகவில்லை.

தயவு செய்து தோனியுடன் ரிஷப் பண்ட்-ஐ ஒப்பிடாதீர்கள்: ஷிகர் தவான்

Photos: பத்ம விருதுகள் பெற்ற விளையாட்டு பிரபலங்கள்!

விளையாடாமலே ட்விட்டர் டிரெண்டிங்கில் இருந்த தோனி!

VIDEO: நீங்க அடுத்த தோனியா? அழகான ரன் அவுட்டை கோட்டை விட்ட ரிஷப்... கடுப்பான கோலி!

Also Watch...

First published: March 11, 2019, 8:31 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading