Home /News /sports /

ஆன்மிகத்தில் ஈடுபடுவது, புல்லாங்குழல் வாசிப்பது மன அமைதியை தருகிறது - ஷிகர் தவான்

ஆன்மிகத்தில் ஈடுபடுவது, புல்லாங்குழல் வாசிப்பது மன அமைதியை தருகிறது - ஷிகர் தவான்

ஷிகர் தவான்

ஷிகர் தவான்

ஜிம்பாப்வேயில் ஒருநாள் தொடரில் ஆட சென்றுள்ள இந்திய அணியின் வைஸ் கேப்டன் ஷிகர் தவான். இவர் 2023 உலகக்கோப்பை வரை தான் ஆடவேண்டுமென்று தீவிர முயற்சியில் கடுமையாக உழைத்து வருகிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ஜிம்பாப்வேயில் ஒருநாள் தொடரில் ஆட சென்றுள்ள இந்திய அணியின் வைஸ் கேப்டன் ஷிகர் தவான். இவர் 2023 உலகக்கோப்பை வரை தான் ஆடவேண்டுமென்று தீவிர முயற்சியில் கடுமையாக உழைத்து வருகிறார்.

    இவர் இளம் வீரர்களுக்கு பக்கபலமாக இருக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்:

    “ஜிம்பாப்வே தொடரில் ஷுப்மன் கில், ஆவேஷ் கான், இஷான் கிஷன் உள்ளிட்ட இளம் வீரர்கள் உள்ளனர். இவர்களுக்கு உதவத் தயாராக இருக்கின்றேன். கிரிக்கெட் தொடர்பாக எந்த சந்தேகம் கேட்டாலும் விளக்கம் அளிப்பேன். என் அனுபவங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

    இப்போதைய இளம் வீரர்கள் தன்னம்பிக்கையுடன் விளையாடுகின்றனர். ஆட்ட நுட்பத்திலும் நுணுக்கத்திலும் கைதேர்ந்தவர்களாக இருக்கின்றனர். இவர்கள் உள்நாட்டுப் போட்டிகள், ஐபிஎல் போட்டிகளில் உள்ள அமைப்பை நன்றாகப் பயன்படுத்தத் தெரிந்து வைத்துள்ளனர்.

    ராகுலுக்கு இந்த ஜிம்பாப்வே தொடர் ஒரு பாடமாக அமையும். இந்தத் தொடரில் நானும் ரன்கள் அடிக்க விரும்புகிறேன். ஜிம்பாப்வே அணியினர் இதற்கு முந்தைய தொடரில் வங்கதேசத்தை வீழ்த்தினர், அதனால் அந்த அணியை குறைத்து மதிப்பிடக்கூடாது. பேட்டிங்கில் அந்நாட்டின் சிகந்தர் ரஜா அசத்துகிறார்.

    இவரைக் கட்டுப்படுத்த பவுலர்கள் உத்திகளை வகுக்க வேண்டும். கிரிக்கெட்டில் பிரகாசிக்க பயிற்சி அவசியம் என்பது போல் மன அமைதிக்கும் பயிற்சி அவசியம். இதனால்தான் ஆன்மீகத்திலும் இசையிலும் நாட்டம் செலுத்தி வருகிறேன், புல்லாங்குழல் வாசிக்க எனக்குப் பிடிக்கும். இதனால் மன அமைதி கிடைக்கிறது.

    நெகெட்டிவ் சிந்தனைகளுக்கு இடம் கொடுக்க மாட்டேன் எப்போதும் தன்னம்பிக்கையூட்டும் விஷயங்களையே யோசிப்பேன், இளம் தலைமுறையினருக்கும் இதைத்தான் கற்றுக்கொடுக்க விரும்புகிறேன்.

    இவ்வாறு கூறினார் ஷிகர் தவான்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Shikhar dhawan

    அடுத்த செய்தி